வியாழன், 12 ஜனவரி, 2017

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - விலங்குகள் நலவாரியம்

புதுடெல்லி தமிழகத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்படாததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதற்காக தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்துவருகின்றனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அரசுக்கு நெருக்கடி தரப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான மத்திய அரசின் அறிவிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, “பொங்கல் பண்டிகைக்குள் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க சாத்தியமில்லை. ஜல்லிக்கட்டு தொடர்பான வரைவு தீர்ப்பு தயாராக இருந்தாலும் வரும் சனிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்க சாதியமில்லை” என்றது. சுப்ரீம் கோர்ட்டு இவ்வாறு கூறியது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இன்றும் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


இதற்கிடையே தடை உள்ளநிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு விலங்குகள் நலவாரிய உறுப்பினர்கள் கடிதம் எழுதிஉள்ளனர். 

தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்து வருவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதிஉள்ளது. 

ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவது போலீசின் கடமை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.  dailythanthi.com

கருத்துகள் இல்லை: