புத்தாண்டு பிறந்து நான்காம் தேதி முதல் அ.தி.மு.க. தலைமை கழக வளாகம் சுறுசுறுப்பாக காணப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள அக்கட்சி நிர்வாகிகளை, பொதுச்செயலாளராக உள்ள சசிகலா சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் இருந்து வரவழைக்கப்படுகின்றனர்.
அதிகளவில் கட்சியினரை அழைத்து வந்து மாவட்ட செயலாளர்கள் முதல் அனைத்து நிர்வாகிகளும் தங்களது பலத்தை நிரூபித்து வருகின்றனர்.
இதனால் கடந்த தலைமை அலுவலகத்தில் தொண்டர்களின் கூட்டம் அலைமோதுகின்றன.
கட்சியினரைப் பார்த்து ஜெயலலிதாவைப் போல மாடத்தில் நின்று கொண்டு இரட்டை விரலை சசிகலா காண்பிக்கிறார்.
அவரது ஓட்டுமொத்த செயலும் ஜெயலலிதாவைப் போலவே இருக்கின்றன. அப்போது, ‘சின்னம்மா வாழ்க’ என்ற தொண்டர்களின் கோஷம் விண்ணைப் பிளக்கிறது.
இந்நிலையில் ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தின் அருகே மிடாஸ் (மதுபான கம்பெனி) கம்பெனியின் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது.
அதில் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் ஏறியுள்ளனர். அவர்கள் கட்சியினரைப் போல தெரியவில்லை.
மிடாஸ் ஊழியர்கள் என்று தெரியவந்ததும் ரத்தத்தின் ரத்தங்கள் மிகுந்த வேதனையடைந்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், “காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து நேற்று நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் தொண்டர்களை தங்களது சொந்த செலவில் அழைத்து சென்றனர்.
ஒரு வார்டுக்கு 5 பஸ்களில் கட்சியினரை அழைத்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நிர்வாகிகள், தங்களால் முடிந்தளவுக்கு கட்சியினரை அழைத்துச் சென்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து ‘சசிகலா முதல்வராக ஆதரவு’ என்று நிர்வாகிகளின் ஆதரவு கடிதமும் கொடுக்கப்பட்டது.
அழைப்பு கிடைத்ததும் கிடைத்த பஸ்ஸ்ஸில் புறப்பட்டோம். அப்போதுதான் மிடாஸ் கம்பெனியின் பஸ்சும் கட்சியினரை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டது.
அதில் கட்சியினரோடு, மிடாஸ் கம்பெனியில் பணியாற்றும் அ.தி.மு.க தொண்டர்களும் சென்றனர். இதில் என்ன தவறு இருக்கிறது” என்றனர்.
அ.தி.மு.க ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க.வினரில் சிலருக்கு விருப்பம் இல்லை. இருப்பினும் பதவியை காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள் செல்கின்றனர். தொண்டர்களும் கட்டாயப்படுத்தியே அழைத்துச் செல்லப்படுவதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், அமைச்சர் கனவில் உள்ள எம் எல் ஏ கணேசன் ஆகியோர் தயக்கம் காட்டுவதால் இந்த மதுபான ஆட்கள் திட்டமாம். அது சரி. லைவ்டே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக