வெள்ளி, 9 செப்டம்பர், 2016

ஜார்ஜுக்கு வசூல் செய்து தர ஒரு பொறுப்பான நபர் ... மாமூல் நாலு கோடியை தொடும்

சபாபதியும் விபச்சாரத் தடுப்புப் பிரிவும்
1996ம் ஆண்டு பணியில் சேர்ந்து காவல் ஆய்வாளராக இருப்பவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீண்ட நாள் பணியாற்றினார். அதன் பிறகு இவர் பணியாற்றிய இடம், சென்னை மாநகர காவல்துறையின் விபச்சார தடுப்புப் பிரிவு.
ஆய்வாளராக இருந்த சபாபதிக்கு விபச்சாரத் தடுப்புப் பிரிவில் ஒரு வாரத்துக்கான மாமூல் 10 லட்சம் ரூபாய். ஜார்ஜ் ஆணையராக இருந்த காலத்தில், சென்னையில் நட்சத்திர ஹோட்டல்கள், மசாஜ் பார்லர்கள், என்று விபச்சாரம் கொடி கட்டிப் பறந்தது. ஒரு ஆய்வாளரக்கு வாரம் 10 லட்சம் என்றால், உயர் உயர் அதிகாரிகளுக்கு எவ்வளவு என்பதை நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவுக்கு அருணாச்சலம் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டவுடன் அவர் செய்த முதல் வேலை விபச்சாரத் தடுப்புப் பிரிவில் நீண்ட காலமாக பணியாற்றிய அனைவரையும் கூண்டோடு மாற்றியதுதான். அந்தப் பிரிவுக்கு நேர்மையான டிஎஸ்பியான மதி என்பவரையும், பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரி என்பவரையும் நியமித்து, சென்னை மாநகர் முழுக்க ரெய்டுகள் நடத்த உத்தரவிட்டார். அருணாச்சலம் கூடுதல் ஆணையராக இருந்த ஒரு சில மாதங்களிலேயே, சென்னை நகரின் நட்சத்திர ஹோட்டல்களும், மசாஜ் பார்லர்களும் கதறத் தொடங்கினர். விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைதாகும் பெண்களின் படங்களை வெளியிடுவதை தடுத்தார். தரகர்களின் படங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகுமாறு பார்த்துக் கொண்டார்.
அடுத்த நடவடிக்கை, ஆய்வாளர் சபாபதி மாமூல் வாங்கியதை ஆதாரங்களோடு நிரூபித்து, துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுத்ததற்காக அருணாச்சலம், திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்தின் விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, மத்தியக் குற்றப் பிரிவுக்கு கூடுதல் ஆணையாளராக வர, ஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏனெனில், ஜார்ஜ் ஆணையராக இருப்பதால், மாமூல் வாழ்க்கைக்கு எவ்விதமான குறைபாடும் இல்லை.

சென்னை நகரத்தில் மசாஜ் பார்லர்கள், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் இதர விபச்சார விடுதிகளில் இருந்து மாதம் வசூலிக்கப்படும் மாமூல் நாலு கோடியை தொடும் என்கிறது காவல்துறை வட்டாரங்கள். விபச்சாரத் தடுப்புப் பிரிவுக்கு ஆய்வாளர் பதவிக்கான நியமனத்துக்கே 50 லட்சம் விலை என்கிறார்கள்.

அடுத்த நடக்கப்போவது என்னவென்றால், ஆய்வாளர் ராஜேஸ்வரி, டிஎஸ்பி மதி ஆகியோர் விபச்சாரத் தடுப்புப் பிரிவில் இருந்து மாற்றப்படுவர்.
ஆய்வாளர் சபாபதி மீண்டும் சென்னை மாநகர விபச்சாரத் தடுப்புப் பிரிவின் வசூல் ராஜாவாக பொறுப்பேற்க உள்ளார். ஜார்ஜுக்கு வசூல் செய்து தர ஒரு பொறுப்பான நபர் வேண்டுமல்லவா ?    முகநூல் பதிவு சங்கரு

கருத்துகள் இல்லை: