ஜெ. அரசின் நூறு நாள் "சாதனை' ஆட்சிக்கு ஒரு சான்றிதழாக தலைமைக் இவற்றில்
போக்குவரத்து, மின்சாரம், சர்க்கரை உற்பத்தி செய்யும் ஆலைகள் ஆகிய பொது
நிறுவனங்கள் அடங்குகின்றன. இந்த 20 பொதுத்துறை நிறுவனங்கள் மார்ச் 31, 2015
வரையிலான ஒரு வருடத்தில் மட்டும் 16 ஆயிரத்து 833 கோடி ரூபாய் நஷ்டத்தை
சம்பாதித் துள்ளன. மொத்தமுள்ள 61 தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களில்
மீதமுள்ள 41 நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து வெறும் 1,978 கோடி ரூபாய்
மட்டுமே லாபம் சம்பாதித்து உள்ளது என இந்த தணிக்கை அறிக்கை
குறிப்பிடுகிறது. இத்துடன் முடிவடைந்து விடவில்லை. இதுவரை தொடர்ந்து
இயங்கும் 61 பொ துத்துறை நிறு வனங்கள் மொத்த மாக 65 ஆயிரத்து 440
கோடிரூபாய் நஷ்டத்தில் இயங்கு கிறது என ஆடிட் டர் ஜெனரல்குழு
மதிப்பிடுகிறது.சி.ஏ.ஜி.
கொடுக்கும் ஒரு வருட கணக்கான 16 ஆயிரத்து 833 கோடி ரூபாயையும் அரசின் ஒரு
வருட செலவு என பட்ஜெட்டில் குறிப்பிடும் 1 லட்சத்து 62 கோடி ரூபாயோடு
சேர்த்தால் அரசின் செலவினத்தில் சுமார் 16ஆயிரம் கோடிரூபாய் கூடுத லாக
கணக்கில் வரும்.
கணக்குத் தணிக்கையாளரின் (சி.ஏ.ஜி.) அறிக்கை அமைந்துள்ளது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். இந்த சி.ஏ.ஜி. தான் மத்திய அரசில் 2ஜி பற்றிய பரபரப்பு அறிக்கையையும் தந்தது. அரசு திட்டங்கள் குறித்த சி.ஏ.ஜி.யின் மதிப்பீடு பரவலாகக் கவனிக்கப்படும் நிலையில், தமிழக அரசின் செயல்பாடுகளில் பல்வேறு குறைகளை கண்டுபிடித்து அறிக்கை தந்துள்ளது. 2015 வரையிலான தமிழக அரசின் செயல்பாடுகளை ஆராய்ந்து இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. தமிழக அரசு 2016-17ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக் கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள நிதி நிலைமைகள் என்ன? அதைப் பற்றி எந்த அரசையும் சாராத, சுயேச்சையான தணிக்கை கமிட்டியான சி.ஏ.ஜி.யின் கருத்து என்ன? மீண்டும் பதவியேற்று நூறு நாள்களைக் கடந்து தமிழகத்தை ஆட்சி செய்து வரும் ஜெ. அரசு சொல்வது உண்மையா? செல்லும் பாதை சரியா? இந்த அறிக்கையின் விளைவுகள் என்னவென பொருளாதார வல்லுநர்களை அலசச் சொன்னோம்.
இந்த பொதுத்துறை நிறு வனங்களின் மொத்த நஷ்ட கணக்கான 65 ஆயிரத்து 440 கோடி ரூபாயை சரிக்கட்ட வேண்டுமென்றால் தமிழகஅரசு வெளியில் கடன் வாங்க வேண்டும். தற் பொழுது தமிழக அரசு கடன் தொகை என குறிப் பிடும் 2 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இதன்மூலம் 3 லட்சம் கோடியாக அதிகரிக்கும். 3 லட்சம் கோடி கடன் தொகை என்பது ஒரு மாநில அரசு பெறும் அதிகபட்ச கடனாக அகில இந்திய அளவில் கணக்கீடு செய்யப்படும். கடன் வாங்குவதில் முதல் மாநிலம் என்ற "சாதனை'யை ஜெ. அரசு படைக்கும்.;மொத்தத்தில், பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்படும் நஷ்டத்தை மறைத்துதான் தமிழக அரசு பட்ஜெட் தயாரித்து உள்ளது.
தமிழக அரசின் உண் மையான நிதிநிலைமை என்பது இந்த பொதுத் துறை நிறுவனங்களில் ஏற்படும் நஷ்டத்தையும் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொண்டால் மிக மோசமாக உள்ளது என சி.ஏ.ஜி. அறிக்கை கூறு கிறது'' என்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள்.>ஏற்கனவே தமிழக அரசுக்குள்ள கடன் சுமையால் தமிழர்கள் ஒவ்வொருவர் தலையிலும் 35,000 ரூபாய் கடனாக விழுந்துள்ளது. அந்த கடன் சுமை பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட் டால் ஏற்படும் நஷ்டத்தையும் சேர்த்தால் 50,000 ரூபாயாக அதிகரிக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
""தமிழக அரசு நடத்தும் அம்மா உணவகங்கள் மூலமாக சுமார் 6 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவ தாக சி.ஏ.ஜி. தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது. சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 4 மாநக ராட்சிகளிலும் முக்கிய நக ராட்சிகளிலும் இயங்கும் இந்த அம்மா உணவகங்களால் அந்த பகுதிகளில் யார் பயன்பெற போகிறார்கள் என எந்த முறையான ஆய்வும் செய்யாமல் திறக்கப்பட்டுள்ளன. அதற்காக வாங்கப்பட்ட பொருட்களிலும் ஊழல் நடந்திருக் கிறது'' என அரசை குற்றம் சுமத்துகிறது இந்த தணிக்கை அறிக்கை.அத்துடன் ""500 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்ட கூவம் நதி சீரமைப்பு திட்டம், 6,400 கோடி ரூபாய் செல வில் திட்டமிடப்பட்ட மோனோ ரயில் திட்டம் போன்றவை நிறைவேற்றப் படவில்லை.
அதே மோனோ ரயில் திட்டத்தை மறுபடியும் நிறைவேற்றப் போகிறோம் என இந்த ஆண்டும் சட்டசபையில் அறிவித்து சாதனை படைத்துள்ளது தமிழக அரசு'' என சி.ஏ.ஜி. அறிக்கை குற்றம் சாட்டுகிறது.;மொத்தத்தில் ""தமிழக மக்களுக்கு இலவசம்+ சாராயம் என இரண்டையும் கொடுத்துவிட்டு பெண்களுக்கு கேபிள் டி.வி.யில் சீரியலை போட்டு விட்டால் போதும் பொதுமக்கள் நமக்கு ஓட்டு போடுவார்கள் என நினைக்கிறது ஜெ. தலைமையி லான அ.தி.மு.க. அரசு. இதுதான் கடந்த ஐந்தாண்டு அ.தி.மு.க. அரசின் சாதனை. அதுவேதான் 100 நாட் கள் ஆண்ட இன்றைய அ.தி.மு.க. அரசின் சாதனையும்'' என்கிறார் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான தேவசகாயம்.
சி.ஏ.ஜி. அறிக்கையில் 2010 முதல் 2015ம் ஆண்டு வரை உள்ள ஐந்தாண்டு காலகட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை மிக மிக மோசமாக செயல்பட்டுள்ளது என்கிறது. மக்கள் தொகைக்கேற்ப பள்ளிகள் இல்லை. பள்ளிகளுக்கு உரிய கட்டிடம் இல்லை. ஆசிரியர்கள் இல்லை என அரசை விளாசுகிறது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அரசு வழங்கும் லேப்-டாப் திட்டம் சரியாக அமல்படுத்தப்படவில்லை. 2011ம் ஆண்டு தமிழகம் வளர்ச்சியற்ற நிலையில் காணப்பட்டது என்றும் 2014-15ம் ஆண்டு தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்றும் மாநில அரசு சொல்கிறது.
;ஆனால் அந்த வளர்ச்சிக்கு காரணம், மத்திய அரசு கொடுத்த அதிக நிதி உதவி தான். ஆனால் அந்த நிதியையும், சரியான திட்ட மிடல் இல்லாத தால் விவசாயத் துறைக்கு பயன் படுத்தவில்லை என சாடுகிறது சி.ஏ.ஜி.>தமிழக சட் டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை முழுமையாக தமிழக அரசை ஊழல் மிக்க... செயல்படாத அரசு என சி.ஏ.ஜி. குற்றம் சாட்டுகிறது. இந்த சி.ஏ.ஜி.யின் அறிக்கை அடிப்படையில்தான் 24 ஊழல் வெளியே வந்தது. அதை தேர்தலில் பிரச்சாரமாக மேற்கொண்டுதான் கடந்த முறை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இந்தத் தேர்தலிலும் அதே பாணியில் தி.மு.க.வைப் பற்றி பிரச்சாரம் செய்து, தொடர்ந்து இரண்டாவது முறையும் ஆட்சிக்கு வந்துள்ளது. அந்த சி.ஏ.ஜி.தான் இப்போது ஜெயலலிதா அரசின் நிர்வாகத்தை தனது அறிக்கையின் மூலம் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.உண்மையை அம்பலப்படுத்திய இந்த அறிக்கையால் ஜெ. கடும் கோபத்திற்குள் ளாகியுள்ளார் என்கிறது கார்டன் வட்டாரம்.-தாமோதரன் பிரகாஷ் விகடன்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக