செவ்வாய், 6 செப்டம்பர், 2016

சு.சாமி : ஜெயலலிதா கம்பனிகளுடன் டீல் வைத்துகொண்டு டிராமா போடுகிறார்


அதிரடிக் கருத்துகளால் ஊடகங்களைக் கவரும் தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவின் அகில இந்திய அளவிலான தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, இன்று சென்னை விமானநிலையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அப்போது ஊடகவியலாளர்கள் காவிரி பிரச்னையில் இருந்து கேள்விகளைத் தொடங்கினார்கள்.
"காவிரி பிரச்னையில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது தாற்காலிகமானதுதான். இது, மறுபடியும் பிரச்னைகளையே உருவாக்கும்.நதிநீர் இல்லாத சவூதி அரேபிய போன்ற நாடுகளில் கடல்நீரைப் பயன்படுத்தி, அந்நாட்டு மக்களின் தண்ணீர் தேவையை 24 மணி நேரமும் பூர்த்தி செய்து வருகிறது.
அதுபோல, தமிழகத்தின் நீர் பற்றாக்குறையை சரி செய்யவும் தமிழக விவசாயிகளின் தேவைக்கும் கடல் நீரை சுத்திகரித்து வழங்க வேண்டும். இது ஒன்றுதான் சிறந்த வழிஎன்று ஜெயலலிதாவுக்கும் தெரியும். ஆனால் அவர் தண்ணீர் தயாரிக்கும் நிறுவனங்களுடன் டீல் வைத்துள்ளார். எனவேதான் கலவரத்தைத் தூண்டிவிட்டு, அவர் அரசியல்செய்து டிராமா போடுகிறார் என்றும் கூறியுள்ளார். ஜெயலலிதா உடனடியாக இப்படி டிராமா போடுவதை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்த சுவாமி, ஏர்செல்மேக்சிஸ் வழக்கு விவகாரத்தில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் விரைவில் ஜெயிலுக்குச் செல்வார்கள். விவசாயிகள் நலனுக்காக கிசான் யாத்திரைசெல்லும் ராகுல் காந்திக்கு விவசாயிகளைப் பற்றி எதுவும் தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் பிரான்சில் உள்ள நைட் கிளப்புகள்தான். நேஷனல் ஹெரால்டு வழக்கில்ராகுலும் விரைவில் ஜெயிலுக்குப் போவார்
அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்திக்க மறுத்த ஹூரியத் தலைவர்கள் அனைவரும் தேச விரோதிகள். பாஜக ஆதரவில் ஆட்சி நடத்தும் மெகபூபா இன்னும்தீவிரவாதிகளோடு தொடர்பு வைத்திருக்கிறார். அவர் திருந்துவார் என்று பாஜக எதிர்பார்த்தது. ஆனால் திருந்தவில்லை. நாய் வாலை நிமிர்த்த முடியாது என்றபழமொழிதான் நினைவுக்கு வருகிறது. ஆகவே, காஷ்மீரில் ஆட்சியைக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்" என்றார் சுவாமி.  மின்னம்பலம.com

கருத்துகள் இல்லை: