காவிரி நதிநீரை தமிழகத்திற்கு
வழங்கும் விவகாரத்தில் சுப்ரமணியன் சுவாமி தமிழகத்திற்கு எதிராக கருத்து
தெரிவித்து தமிழர்களை அவமததித்து உள்ளார்.
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததால் தமிழகத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், காவிரியில் இருந்து தண்ணீரை திறந்து விடக்கோரி விவசாய சங்கங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் காவிரியில் இருந்து தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 15 ஆயிரம் கன அடி தண்ணீரை 10 நாளைக்கு தொடர்ந்து தமிழகத்திற்கு கர்நாடகம் தர வேண்டும் என்று உத்தரவிட்டது.இதனை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பாஜக எம்பியான சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில், காவிரி தண்ணீருக்காக கத்திக் கொண்டிருப்பதற்கு பதிலாக கடல் நீரை குடிநீராக்கி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.>தமிழக மக்கள் நீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின் இந்த பதிவு தமிழக விவசாயிகளை அவமதிப்பது போல் உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக