வெள்ளி, 9 செப்டம்பர், 2016

மத்தியப்பிரதேசத்தில் அம்மா உணவகம்! குவாலியர், போபால், இந்தூர் ,ஜாபல்பூரில் முதலில் ...


அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம் அடித்தட்டு மக்களின் அமோக மின்னம்பலம்.காம் :ஆதரவைப் பெற்ற திட்டமாக உள்ளது. குறைந்த வருவாய் பிரிவினருக்குக் குறைந்த விலையில் உணவுகளை வழங்கும் அம்மா உணவகங்கள் சென்னையில் தொடங்கப்பட்டு பின்னர் தமிழகம் முழுக்க விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் பலனை அறிந்த பல மாநிலங்களின் அதிகாரிகள் தமிழகத்தின் அம்மா உணவகத்தை வந்து பார்வையிட்டு சென்றனர். ஏற்கனவே, ஆந்திர மாநிலத்தில் அம்மா உணவகத்தைப் பின்பற்றி ‘அண்ணா மெஸ்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ராஜஸ்தான், புதுடெல்லி உள்ளிட்ட மாநில முதல் மந்திரிகளும் தங்களுடைய மாநிலங்களில் மலிவு விலையில் அரசு உணவு விற்பனையை தொடங்கின.

இப்போது அம்மா உணவகத்தின் வடிவத்தை பின்பற்றி மத்தியப்பிரதேசத்தை ஆட்சி செய்யும் சிவராஜ் சிங் சவுகான் அரசு, ரூபாய் பத்துக்கு ‘தாளி’ உணவை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டத்தை பாரதீய ஜனதா அரசு, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா பிறந்த நாளான 25ஆம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. சப்பாத்தி, பருப்பு, சாதம், காய்கறிகள் மற்றும் உறுகாய் அடங்கிய ’தாளி’ உணவை ரூபாய் பத்துக்கு விற்பனை செய்ய சவுகான் அரசு முடிவு செய்து உள்ளது. முதலில் மலிவு விலை உணவகங்கள் குவாலியர், போபால், இந்தூர் மற்றும் ஜாபல்பூரில் தொடங்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை: