செவ்வாய், 6 செப்டம்பர், 2016

தமிழகம் சாதி சண்டைகளில் இரண்டாம் இடம்.. பிகார் முதல் இடம்

சில விஷயங்களில் முதலில் வந்தால் மரியாதை. சில விஷயங்களில் கடைசியில் வந்தால் மரியாதை. தமிழன், புகழென்றால் உயிரையும் கொடுக்க முன்வருவான்- பலியென்றால் உலகோடு பெறினும் ஒப்புக்கொள்ளமாட்டான் என்பது புறநானூற்றுக்கவி இளம்பெருவழுதியின் வாக்கு.அந்த தமிழகம் இன்றைக்கு வெகுவாக மாறிவிட்டது. அதை உறுதிப்படுத்துவதுபோல் இருக்கிறது 2015-ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணப் பிரிவு வெளியிட்டுள்ள தரவுகள். இந்தப் பட்டியலில் சாதி சார்ந்த மோதல்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது தமிழகம்.வழக்கமாக, ஜாதி மோதல்கள் அதிகமாக காணப்படும் பீகாரை பின்னுக்குத் தள்ளி மூன்றாமிட த்துக்கு அனுப்பிவிட்டு வாகை சூடியிருக்கிறது தமிழகம். முதலிடத்தை தக்கவைத்து கிரீடம் சூடியிருக்கிறது உத்தரப்பிரதேசம். 2014-ஆம் ஆண்டை ஒப்பிட சாதி சார்ந்த மோதல்கள் நூறு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது தமிழகத்தில்.2014-ல் நிகழ்ந்த சாதிய மோதல்களின் எண்ணிக்கை 211. மாறாக, தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 426 சாதிய அடிப்படையிலான மோதல்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை: