திங்கள், 5 செப்டம்பர், 2016

எஸ். ஆர். எம்.நிறுவனம், நியூஸ் 7 பரஸ்பர குற்றச்சாட்டு... .. அவதூறு பரப்புகிறார்கள்


thetimestamil.com :சர்வதேச தரம் கொண்ட எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்கள் குறித்து பல்வேறு அவதூறுகளை நியூஸ் 7 தொலைக்காட்சி பரப்பி வருவதாக பதி‌வாளர் சேதுராமன் தெரிவித்துள்ளார். திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தாடு பரப்பப்படும் இந்த அவதூறுகளில் துளியளவும் உண்மையில்லை என்றும் மிரட்டலையே தங்களது தொழிலாக கொண்டிருக்கும் சிலர் இவ்வாறான அவதூறுகளை நியூஸ் 7 தொலைக்காட்சியின் வழியே பரப்பி வருவதாகவும் பதிவாளர் கூறியுள்ளார். இதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ள அவர், எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்கள் இன்றைக்கு சர்வதேச அளவில் பல்வேறு பிரபல நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படியுங்கள்:சாதாரண பள்ளி ஆசிரியர்
15 ஆயிரம் கோடி சொத்துகளுக்கு
அதிபதியானது எப்படி?
ஆண்டுதோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்ப‌ட்ட எஸ்.ஆர்.எம். மாணவர்கள் வளாக நேர்காணல் மூலமாக வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இப்போதும் தரமான கல்விச் சேவையின் மூலமாக பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து வருவதாகவும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும், 600-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கி வருபவர் எங்கள் குழுமத் தலைவர் பாரிவேந்தர் என்றும் கிராமப்புற மாணவர்களுக்கும் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதே நிறுவனத்தின் குறிக்கோள் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். எனவே அவதூறுகள் மூலமாக எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தின் சிறப்பான செயல்பாடுகளை தடுத்து விட முடியாது என்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பதிவாளர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த அறிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து பதில் அறிக்கை வெளியிட்டுள்ளது நியூஸ் 7 தொலைக்காட்சி. அந்த அறிக்கையில்,
எஸ்ஆர்எம் குழுமத்தின் முறைகேடுகளை தக்க ஆதாரத்தோடு செய்தியாக வெளியிட்ட நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி மீது எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அவதூறு பரப்பும் வகையில் வெளியிட்ட அறிக்கைக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி கண்டனம் தெரிவிக்கிறது.
● SRM குழும முறைகேடுகள் பற்றி கல்வி கொள்ளைக்கு எதிரான மக்கள் இயக்கம் சட்டப்பூர்வ ஆவணங்களை வெளியிட்டு வருகிறது.
● வெளியிடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே நியூஸ் 7 தமிழ் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறது.
● நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை SRM குழுமம் எந்த ஒரு விளக்கத்தையும் இப்போது வரை முன்வைக்கவில்லை.
இதையும் படியுங்கள்:சசிகலா புஷ்பாவை வைத்து
அதிமுக அரசை மிரட்டுகிறார் வைகுண்டராஜன்
● சாதாரண வணிக வளாகம் கட்டுவதற்கே தீயணைப்புத்துறை, சிஎம்டிஏ உள்ளிட்டவற்றின் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
● விதிமுறைகளை பின்பற்றாமல், SRM, கல்விக்குழுமம் நடத்தி வருவதை நியூஸ் 7 தமிழ் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி வருகிறது.
● லட்சக்கணக்கான மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது நியூஸ் 7 தமிழ்.
● குற்றச்சாட்டிற்கு பதிலளிக்காமல் நியூஸ் 7 தமிழுக்கு கண்டனம் தெரிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
● முறையான பதில்களை SRM குழுமம் அளித்தால், அதை வெளியிடுவதற்கும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தயாராக உள்ளது.

கருத்துகள் இல்லை: