டெல்லியைச் சேர்ந்தவர் பிரீத்தி ரதி(23) என்பவர் மும்பை கொலாபாவில் உள்ள
கடற்படை மருத்துவமனையில் பணிபுரிய மும்பை பந்தரா ரெயில் நிலையத்தில் கடந்த
2013-ம் ஆண்டு மே மாதம் வந்திறங்கியபோது அவர் மீது ஒரு மர்ம நபர் ஆசிட்
வீசிவிட்டு தப்பியோடிவிட்டார். இதில், படுகாயமடைந்த ரதி சிகிச்சை பலனின்றி
பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி தலைமறைவாக இருந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று டெல்லியில் இருந்து பிரீத்தி பயணித்த அதே ரெயிலில் வந்த ஒருவர் ரதி மீது ஆசிட் வீசியதாக தெரியவந்தது.
இதையடுத்து, ரதியின் வீட்டருகே வசித்துவந்த அன்குர் லால் பன்வார் என்பவனை கைது செய்த போலீசார் அவன்மீது மும்பையில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் அன்குர் லால் பன்வார் குற்றவாளிதான் என்பதை நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன் உறுதி செய்திருந்தது.
தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்ற நிலையில், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசுதரப்பு வழக்கறிஞர் வாதிட்டிருந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கில் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, பெண் மீது ஆசிட் வீசிய குற்றவாளி அன்குர் லால் பன்வாருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலக்கியாஇன்போ.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக