மீனாம்பாள் சிவராஜ் (அன்னை மீனாம்பாள் சிவராஜ்) 26 டிசம்பர், 1904 - 30 நவம்பர், 1992
பெண் விடுதலைக்காகவும், தலித் விடுதலைக்காகவும் போராடுவததைத் தன் வாழ்நாள்
இலட்சியமாகக் கொண்டு போராடி வென்ற பெண். இவர் இந்தி எதிர்ப்புப் போரின்
முதல் படைத்தலைவியாக விளங்கியவர். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம்
போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர். சென்னை மாநகராட்சியின் துணை மேயர். 1938
திசம்பரில் நீதிக்கட்சியின் மாநாடு 29,30,31 மூன்று நாட்கள்
நடைப்பெற்றன.அந்த மாநாட்டில்தான் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த மாநாட்டுப் பந்தலிலேயே மூன்றாம்நாள்
இறுதியில் ஆதி திராவிடர் மாநாடு நடத்த மீனாம்பாள் சிவராஜ் நீதிக்கட்சி
தலைவர்களிடம் ஒப்புதல் பெற்றிருந்தார்.மீனாம்பாள் தலைமையில் நடைபெற்ற அந்த
மாநாட்டில் அம்பேத்கர் தலைமையை ஏற்று அகில இந்திய அளவில் மாநாடு நடத்துவது
என்று தீர்மானித்தனர்
இவர் தலித் சமுதாயத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதியான வாசுதேவப்பிள்ளையின் மகள். முதன் முதல் கப்பலோட்டிய தமிழர் என்று புகழப்பட்டவரும், கோடீஸ்வரப்பிள்ளை என்று அழைக்கப்பட்டவருமான மதுரைப்பிள்ளையின் பேத்தி.இவர்
அக்காலத்தில் ரங்கூனில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அக்காலத்திலேயே ரங்கூனில் மெட்ரிக்குலேசன்வரை படித்தவர்.[2] இவர் தனது 16வது வயதில் 1918இல் தலித் இயக்கத் தலைவர் ந. சிவராஜ் என்பவரை மணந்து கொண்டார்.
vizhithezhuiyakkam.blogspot.com
சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலினப் பெண் துணை மேயர்...
திரைப்படத் தணிக்கைக்குழு உறுப்பினர்,
சென்னைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர்,
நெல்லிக்குப்பம் பாரி நிறுவனத்தின் தொழிலாளர் தலைவர், தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குநர்,
மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத் தலைவர்,
லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழுத் தலைவர் ..எனப் பல பதவிகளை வகித்தவர்.

- கவுன்சிலர் (6 ஆண்டுகள்)
- கௌரவ மாகாண நீதிபதி (16 ஆண்டுகள்)
- திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் (6 ஆண்டுகள்)
- சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினர் (9 ஆண்டுகள்)
- தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர்
- சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர்
- சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினர் (13 ஆண்டுகள்)
- போருக்குப்பின் புனரமைப்புக்குழு உறுப்பினர்
- S.P.C.A உறுப்பினர்
- நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர்
- தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர்
- அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் (6 ஆண்டுகள்)
- சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர்
- விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர்
- காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர்
- மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவர் (6 ஆண்டுகள்)
- சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர்
- அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர்
- லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர்
vizhithezhuiyakkam.blogspot.com
சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலினப் பெண் துணை மேயர்...
திரைப்படத் தணிக்கைக்குழு உறுப்பினர்,
சென்னைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர்,
நெல்லிக்குப்பம் பாரி நிறுவனத்தின் தொழிலாளர் தலைவர், தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குநர்,
மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத் தலைவர்,
லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழுத் தலைவர் ..எனப் பல பதவிகளை வகித்தவர்.
எழும்பூர் நீதிமன்றத்தில் 16 ஆண்டுகள் கவுரவ நீதிபதியாகப் பணியாற்றியவர்..!
தலித் உரிமைப் போராட்டங்கள், சுயமரியாதைக் கூட்டங்கள், இந்தி எதிர்ப்புப் போராட்டம், பெண்ணுரிமைப் போராட்டம் என்று தமிழ்நாட்டில் நிகழ்ந்த அத்தனை முக்கிய நிகழ்வுகளிலும் துணிச்சலுடன் பங்கேற்றவர் அன்னை மீனாம்பாள்.
திராவிட இயக்கத் தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு பெண்கள் மாநாடு நடத்தி 'பெரியார் என்ற பட்டத்தைச் சூட்டியவர் மீனாம்பாள்தான்!
மும்பையில் ஒரு முறை, மீனாம்பாளின் பணிகளை அறிந்து அவரது வீட்டுக்கு வந்த அம்பேத்கர், இவர் என் அன்பு சகோதரி என்று மகிழ்ந்து பாராட்டினார்.
இத்தனை சிறப்புகள் மிக்க ஒரு ஆளுமை ..இந்த நூற்றாண்டுத் தமிழகப் பெண்கள் வரலாற்றில்..முன்னோடியாய்க் குறிப்பிடப் பட்டு, பொதுத் தளத்தில் அறிமுகம் பெற்றிருக்க வேண்டியவர்.
ஆனால்..பட்டியலின ஆளுமைகளை மறைத்துக் கடந்து செல்வது தானே தமிழ்ச் சமூக நீதிப் பண்பாடு..! முகநூல் பதிவு ஜீவகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக