மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொடக்கப்பள்ளி மாணவிகள் 3 பேரை அதே
பகுதியைச் சேர்ந்த மற்றொரு தொடக்கப்பள்ளி மாணவர்கள், தாக்கியதாகக்
கூறப்படுகிறது. தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவிகளின் பெற்றோர்
அளித்த புகாரின் பேரில், ஒரு மாணவி மற்றும் 4 மாணவர்கள் மீதும், கடுமையான
சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
12 வயதுக்குட்பட்ட தொடக்கப்பள்ளி மாணவர்கள் மீது அச்சட்டங்களைப் பயன்படுத்தவே முடியாது என்ற நிலையில் எம் எல் ஏ கருணாஸின் அழுத்தத்தின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஐந்து குழந்தைகள் மீதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்தின் எட்டு பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது காவல்துறை.
கடுமையான சட்டத்தின் கீழ் வழக்குப் பதியும் அளவுக்கு என்ன நடந்தது?
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம், உலைப்பட்டி கிராமத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று தலித் சிறுவர்கள் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அந்த வழியே வந்த சூலப்புரம் இந்து ஆரம்பப் பள்ளியில் படிக்கும் தேவர் சாதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகளும், ஒரு சிறுவனும் தலித் சிறுவர்களிடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இரு தரப்பு சிறுவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை பேசித் தீர்க்காமல், குழந்தைகளைப் பாதுக்காக்கும் சட்டத்தின் கீழ் 7 வயது சிறுவன், சிறுமி உள்பட ஐந்து பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிகாரத்தைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சாதியினருக்கு ஆதரவாகச் செயல்பட்ட காவல்துறையினர் மீதும் அதிகார பலத்தை பயன்படுத்திய கருணாஸ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.thetimestamil.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக