ஜெயலலிதாதான் போல்டான தலைவர்' என்று மக்கள் நினைக்கிறார்கள். அவரைப்
போலவே, ' நீங்களும் துணிச்சல்காரர்' என்று மக்கள் எண்ணுகிறார்கள். உங்கள்
பின்னால் நாங்கள் இருக்கிறோம். தைரியமாக இருங்கள்' என ஆறுதல்
கூறிய பெருசு! .
சசிகலா புஷ்பாவை ராஜினாமா செய்ய வைக்கும்
முயற்சிகளில் தளராமல் போராடுகிறார்கள் அ.தி.மு.க எம்.பிக்கள். அதே சமயம், ' நேற்று டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்தவுடன் கனிமொழியிடம் நீண்ட நேரம் விவாதித்தார் சசிகலா' என்கின்றனர் தி.மு.கவினர். அ.தி.மு.க தலைமையோடு ஏற்பட்ட மோதலில், எம்.பி பதவியை ராஜினாமா செய்யாமல் டெல்லியிலேயே முகாமிட்டிருக்கிறார் சசிகலா புஷ்பா. புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அவர் மீது போடப்பட்ட வழக்குகளில் ஜாமீன் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க வழக்கறிஞர்கள், 'அந்தந்த மாவட்ட எல்லைகளுக்குள் உள்ள நீதிமன்றத்தில்தான் பிணை கேட்க முடியும்' எனத் தெரிவித்தனர். இதன்பின்னர், வருகிற 22-ம் தேதி வரையில் சசிகலாவை கைது செய்தவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார் நீதிபதி.
இதனிடையே பாலியல் புகார், பணமோசடி என சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் மையப்படுத்தி எழுந்துள்ள வழக்குகளில் இருந்து விடுவிக்க, சமரசப் படலத்தைத் தொடங்கினர் உளவுத்துறை அதிகாரிகள் சிலர். இந்த சமரசப் பேச்சிற்கு சசிகலா உடன்படவில்லை. தமிழ்நாட்டிற்குள் கால் வைக்க முடியாத அளவுக்கு நிலைமை எல்லை மீறிப் போயிருப்பதைக் கண்டு கொந்தளிக்கிறார். நேற்று மீடியாக்களிடம் பேசும்போதும், ' எதையும் சட்டரீதியாகவே எதிர்கொள்வேன். என்னைச் சீண்டினால் தமிழ்நாட்டையே புரட்டிப் போடுவேன்' என ஆவேசமானார்.
இந்நிலையில், ' எனக்கு ஆதரவாக இருங்கள்' என சமுதாயப் பிரமுகர்களுக்குப் போன் போட்டு பேசி வருகிறார் சசிகலா. ' என்னை பழிவாங்குவதன் மூலம் சமுதாயத்தை அசிங்கப்படுத்த நினைக்கிறார்கள்' என்றெல்லாம் பேசி வருகிறார். நேற்று டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும், தி.மு.க எம்.பி கனிமொழியிடம் நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார். தி.மு.க முகாமுக்குள் வருவது குறித்தும் பேசியிருக்கிறார். இதற்குப் பதில் கொடுத்த கனிமொழி, ' இப்போதைக்கு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். எந்தக் கட்சியிலும் சேராமல் லாபி பண்ணுங்கள். நீங்கள் தி.மு.கவுக்குள் வந்துவிட்டால், அது தி.மு.க, அ.தி.மு.க சண்டையாக உருமாறிவிடும். எந்தக் கட்சியில் சேருகிறீர்களோ, அந்தக் கட்சியின் பிரச்னையாகவே மாற்றிவிடுவார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக