பார்லிமென்டின் சென்ட்ரல் ஹாலில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்
ஒன்றாக அமர்ந்து, டிபன் சாப்பிடுவது வழக்கம். இவர்கள்,
பத்திரிகையாளர்களுடன் ஜாலியாக பேசுவர்.
முதல்வர்,
ஜெ., மீது, எம்.பி., சசிகலா புஷ்பா, ராஜ்யசபாவில் வெளிப்படையாக புகார்
கூறியதை அடுத்து, அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் நிலையே மாறி விட்டது.
இப்போது, அ.தி.மு.க., -
எம்.பி.,க் கள் யாரையும், அதிகமாக சென்ட்ரல் ஹாலில் காண்பதில்லை.
இந்த
விவகாரத்திற்குப் பின், சில வட மாநில பத்திரிகையாளர்கள்அ.தி.மு.க., -
எம்.பி.,க்களை இந்த ஹாலில் சந்திக்கச் சென்றனர். இவர்கள் வருவதை
பார்த்ததுமே, 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதைப் போல, அ.தி.மு.க., -
எம்.பி.,க்கள் ஓடி மறைந்து போகின்றனர். மிகவும் தெரிந்த பத்திரிகையாளர்கள்
இவர்களிடம் பேச முற்பட்டால், 'உஷ்' என, வாயில் விரல்
வைத்து, சைகை மொழியில், 'பேசமுடியாது' என, விலகிச் செல்கின்றனர். இதில், இன்னொரு கூத்து என்னெவென்றால், இந்த அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் தங்கள் சக எம்.பி.,க்களுடனும், அதிகமாகப் பேசுவதில்லை; சபையில் அமர்ந்துகொள்கின்றனர். சபை ஒத்தி வைக்கப்பட்டால், அ.தி.மு.க., அலுவலகத்தில் அமர்ந்து கொள்கின்றனர்; காரணம், அலுவலகத்திற்குள் பத்திரிகையாளர்கள் வர முடியாது. அப்படியே வந்தாலும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் யாரும் பேசுவதும் இல்லை. எல்லாம், 'அம்மா'வின் உத்தரவாம்.தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக