திமுக-வைச் சேர்ந்த
சிலரும் சசிகலா புஷ்பாவுடன் பேசியிருக்கிறார்கள். ‘நீங்க எதுக்கும் பயப்பட
வேண்டாம். எல்லாவகையிலும் நாங்க உங்களுக்கு பாதுகாப்பா இருக்கோம். நீங்க
சரின்னு சொன்னா தலைவரையும், தளபதியையும் பார்க்க ஏற்பாடு செய்றோம்’ என்று
சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சசிகலா புஷ்பாவோ, ‘உங்க அன்புக்கு நன்றி.
இப்போ நான் அப்படி ஒரு முடிவையெடுத்தால், இவ்வளவு நாள் நான் செஞ்சது
எல்லாம் ஏதோ திமுக-காரங்க சொல்லிக் கொடுத்து செய்ததுமாதிரி ஆகிடும்.
இப்போதைக்கு நான் எந்தக் கட்சியிலும் இணையாமல் இருப்பதுதான் நல்லது.
பிரச்னைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரட்டும். அதன்பிறகு அதைப்பற்றி
யோசிப்போம். அதே நேரத்தில், மாநிலங்களவையில் எனக்குச் சிக்கல் வந்தபோதும்,
அதன்பிறகும் திமுக-வைச் சேர்ந்தவர்கள்தான் எனக்கு தொடர்ந்து ஆதரவாக
இருந்தீங்க. அந்த நன்றியை நான் எப்பவும் மறக்கவே மாட்டேன்’ என்று
சொன்னாராம்.
“சசிகலா புஷ்பாவுக்கு நெருக்கடிகள் இறுகி வருகின்றன. தூத்துக்குடியில் இரண்டு பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்மீதும் அவரது குடும்பத்தினர்மீதும் வழக்கு பதிவு செய்து உடனடியாகக் கைது செய்யலாம். ஆனால், காவல்துறை இன்னும் வழக்கு பதிவு செய்யாமல் இருக்கிறது. அதற்குக் காரணம், எங்களால் எந்தநேரத்திலும் எதுவும் செய்யமுடியும் என்று புஷ்பாவை பயம் காட்டுவதற்காகத்தான் இந்த ஏற்பாடுகள் என்று சொல்கிறார்கள். புஷ்பாவை டேமேஜ் செய்யும் புகார்கள் அடுத்தடுத்து இன்னும் வெளியில் வருமாம். அதெல்லாம் வந்தபிறகுதான் அடுத்த ஆக்ஷன் இருக்கும் என்கிறார்கள். இதற்கிடையில், நேற்று இரவு அதிமுக எம்.பி. ஒருவர் புஷ்பாவின் கணவரோடு பேசினாராம். அப்போது அவர், ‘அம்மாவை யாராவது பகைச்சுக்குவாங்களா? இதெல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா. இப்போகூட எதுவும் கெட்டுப் போயிடல… நேரா குடும்பத்தோடு சென்னைக்குப் போய் அம்மா கால்ல விழுந்துடுங்க. அவங்க சொன்னமாதிரி எம்.பி. பதவியை ராஜினாமா செஞ்சுடுங்க. உங்களை மன்னிச்சுடுவாங்க…’ என்று அட்வைஸ் செய்திருக்கிறார். ஆனால், புஷ்பாவின் கணவரோ, ‘இதுக்குமேல அதைப்பற்றி பேசி என்னங்க ஆகப் போகுது? எது நடந்தாலும் பார்த்துக்கலாம்’ என்று சொல்லிவிட்டாராம்.
இதற்கிடையில், பிரதமரைச் சந்திப்பதற்காக அப்பாயின்மெண்ட் கேட்டிருக்கிறாராம் சசிகலா புஷ்பா. அப்படி பிரதமர் நேரம் ஒதுக்கும்போது, போயஸ் கார்டனில் தனக்கு நடந்த துன்புறுத்தல்களை அவரிடம் விலாவாரியாகச் சொல்ல திட்டமிட்டிருக்கிறாராம். அதன்பிறகுதான், தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதையும், தன்மீது புகார்கள் கொடுக்கப்பட்டு வருவதையும் பிரதமர் கவனத்துக்குக் கொண்டுபோக முடிவு செய்திருக்கிறாராம்.
இப்படியாக, சசிகலா புஷ்பா சமாச்சாரம் பல்வேறு திசைகளில் பயணிக்கிறது” என்பதுதான் அந்த ஸ்டேட்டஸ். மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக