சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஐ.ஓ.பி. வங்கியுடன் சேர்த்து மற்ற வங்கிகளின் பணமும் ரயிலில் கொண்டுவரப்பட்டது. 266 பெட்டிகளில் பல கோடி ரூபாய் பணம் கொண்டு வரப்பட்டது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் வந்தவுடன் பார்த்தபோது பணம் இருந்த பெட்டி உடைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. கொள்ளை போன பணம் எவ்வளவு என்று மதிப்பிடவில்லை. கொள்ளை நடந்த சம்பவம் குறித்து ரிசர்வ் வங்கி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சேலத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு புறப்பட்ட இந்த பயணிகள் ரயில் ஆத்தூர், விருத்தாசலம் விழுப்புரம் வழியாக சென்னை வந்தது. பணம் இருந்த ரயில் பெட்டிக்கு ஒரு டி.எஸ்.பி. 4 எஸ்.ஐ. துப்பாக்கியுடன் காவல் இருந்தனர். எஞ்சினுக்கு அடுத்த ரயில் பெட்டியில் பணப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் ஒடும் ரயிலில் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.>ரயிலில் பணம் வருவதை முன்கூட்டியே அறிந்த நபர்களே, நடுவழியில் நள்ளிரவில் பணம் இருந்த பெட்டிக்குள் நுழைந்து தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர் என்று கூறப்படுகிறது.>ரயிலில் வந்த பணம் கிழிந்த நோட்டுகள் என்றும், அவை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பதற்காக கொண்டு வந்தது, கொள்ளையர்கள் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது.;படங்கள்: ஸ்டாலின் நக்கீரன்.இன்
செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016
சென்னை- சேலம் ரயிலில் ரிசேர்வ் வங்கி பணம் கொள்ளை.. 266 பெட்டிகளில் ? ....

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக