கோவை
ஈசா யோகா மையம் ஆக்கிரமித்துள்ள யானைகள் வழித்தடங்களை மீட்க வேண்டும் என
வலியுறுத்தி அந்த மையத்தை முற்றுகையிட முயன்ற சமூக நீதிக்கட்சியினர் 30
பேரை காவல் துறையினர் கைது செய்தனர். ஈசா யோகா மையம் முன்பாக ஏராளமான
போலிசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;கோவை
ஈசா யோகா மையம் இளைஞர்களை மூளை சலவை செய்வதாகவும்,ன நிலங்களை
ஆக்கிரமித்துள்ளதாகவும், ஈசா பள்ளியில் குழந்தைகள்
துன்புறுத்தப்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்நிலையில்
கோவை ஈசா யோகா மையம் ஏராளமான வன நிலங்களை ஆக்கிரமித்து ள்ளதாகவும் இதனால்
யானைகள் வழிதடம் மறிக்கப்பட்டு அவை உயிரிழப்பதாகவும் கூறி சமூக
நீதிக்கட்சியினர் இன்று ஈசா மையத்தை முற்றுகையிட போவதாக அறிவித்து
இருந்தனர். இதனையடுத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யாபாரதி
தலைமையில் ஈசா யோகா மையம் முன்பாக ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டு
இருந்தனர்.
மேலும் ஈசா யோகா மையம் செல்லும் சாலையில் தடுப்புகளை அமைத்த போலிசார், அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனைக்குள்ளாக்கினர். இந்நிலையில் ஈசா யோகா மையத்தை முற்றுகையிட வந்த சமூக நீதிக்கட்சியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் செம்மேடு என்ற இடத்தில் தடுத்து நிறுத்தினர். அப்போது உலக யானைகள் தினத்தை முன்னிட்டு இந்த முற்றுகை போராட்டத்தை நடத்துவதாகவும் யானைகளின் வழித்தடங்களை மீட்க வேண்டும் எனவும் ஈசா மையத்தின் மீதான புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதனையடுத்து முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற 30க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்."
;சமூக நீதிக்கட்சியினர் முற்றுகை போராட்டத்தாலும் ஏராளமான போலிசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டதாலும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது .நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக