தமிழகத்தின்
ஆளுநராக இருக்கும் ரோசய்யாவின் பதவிக்காலம் இம்மாதம் 31ஆம் தேதியுடன்
நிறைவடைகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு, அப்போதைய ஆந்திர முதல்வர் ராஜசேகர
ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைய, ரோசய்யா ஆந்திராவின் 15ஆவது
முதலமைச்சராக பதவி ஏற்றார். பின்னர் உடல்நிலையைக் காரணம் காட்டி ராஜினாமா
செய்தார். இந்நிலையில் அப்போதைய தமிழக ஆளுநர் பர்னாலாவின் பதவிக்காலம்
முடிவடைய தமிழக ஆளுநராக ரோசய்யா நியமிக்கப்பட்டு 2011 ஆகஸ்ட் 31ஆம் தேதி
பதவியேற்றார். அவருடைய பதவிக்காலம் இம்மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடையும்
நிலையில் புதிய ஆளுநரை நியமிக்க பாஜக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
தனது நம்பிக்கைக்குரியவர்களைக் கவர்னர்களாக நியமித்துவரும் மோடி தமிழகத்துக்கு ஆளுநரை நியமிக்கும் பொறுப்பை பாஜக தலைவர் அமித்ஷாவிடம் ஒப்படைத்திருக்கிறார். அவர் கர்நாடக பாஜக-வின் மூத்தத் தலைவர் டி.ஹெச். சங்கரமூர்த்தியை தமிழக ஆளுநராக நியமிக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. டி.ஹெச். சங்கரமூர்த்தி 1940 ஏப்ரல் 30இல் பிறந்தவர். 1966ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட சங்கரமூர்த்தி, பாஜக-வின் மூத்தலைவர்களுள் ஒருவர். மின்னம்பலம.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக