சென்னை: தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு நெருக்கமான மிக முக்கிய
பிரமுகர்களின் ஏடாகூட வீடியோக்கள் தம் வசம் இருப்பதால்தான் முதல்வர்
ஜெயலலிதாவை எதிர்த்து சசிகலா புஷ்பா தில்லாக மல்லுக்கட்டுவதாக செய்திகள்
வெளியாகி உள்ளன.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சவால்விட்டு பேட்டி கொடுத்த அதிமுகவினர்
அண்மைக்கால சரித்திரத்தில் யாரும் இல்லை.. ஆனால் அக்கட்சியில் இருந்து
டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பாவோ, தமிழகத்தை தலைகீழாக
புரட்டுவேன் என மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
ஒருபோதும் ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்றும் சசிகலா
தில்லாக கூறி வருகிறார். இப்படி சசிகலா புஷ்பா படுபோல்டாக ஜெ.வை
எதிர்ப்பது பல காரணங்கள் கூறப்படுகிறது.
தென்மாவட்ட தொழிலதிபர் ஒருவரது பக்க பலம் சசிகலா புஷ்பாவுக்கு
இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சசிகலா புஷ்பாவையும் தென்மாவட்ட
புள்ளியையும் வேட்டையாடும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் ஆளும் அதிகார வர்க்கத்துக்கு மிக நெருக்கமான
பிரமுகர்கள் சிலரைப் பற்றிய அந்தரங்க வீடியோக்கள் சசிகலா புஷ்பாவிடம்
சிக்கியிருக்கிறதாம்.. சசிகலா புஷ்பாவுடன் நட்பாக இருந்த காலத்தில் அந்த
பிரமுகர்களின் பலவீனங்கள் பின்னாளில் உதவும் என்பதால் எடுத்து வைக்கப்பட்ட
ஏடாகூட வீடியோக்களாம் அது
அந்த அஸ்திரத்தை 'ரிலீஸ்' செய்தால் அவ்ளோதான்... தமிழக அரசியலே
தலைகீழாக போய்விடுமாம்... இப்படித்தான் தமக்கு நெருக்கமான
பத்திரிகையாளர்களிடம் சொல்லி வருகிறாராம் சசிகலா புஷ்பா. இது உண்மைதானா? என
மேலிடமும் விசாரித்துக் கொண்டிருக்கிறதாம்..
இந்த விசாரணையில் சில வீடியோக்கள் இருப்பது உண்மை என்பதற்கான
சமிக்ஞைகளும் சசிகலா புஷ்பா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்... ஆகையால்
சமாதானமாக போய்விடலாம்... வம்பு வழக்கு எதுக்கு என நிபந்தனை விதித்துக்
கொண்டிருக்கிறது கார்டன் தரப்பு
Read more at: //tamil.oneindia.com
Read more at: //tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக