தனக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்திருப்பதாக தமிழக
எம்.பி சசிகலா புஷ்பா கொதித்தெழுந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி
கொடுத்திருக்கிறார். “மேயராக இருந்த என்னை அழைத்து தமிழக முதல்வர் எனக்கு
வழங்கிய எம்.பி பதவி ஒன்றும் சாதாரண பதவி கிடையாது. அப்படியொரு பதவியை
எனக்கு அவர் வழங்கியிருக்கிறார் என்றால், நான் அதிமுக-வின் வளர்ச்சிக்கு
அத்தனை உழைத்திருக்கிறேன். எனக்கு அந்த பதவி வழங்கப்பட்டபோது ‘என்னைவிட
சீனியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுங்கள்’ என்று மறுத்தேன்.
ஆனால், என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு பதவியை கொடுத்தார். காரணம், என்
திறமை குறித்தும் கட்சிக்காக நான் உழைத்தது குறித்தும் முதல்வருக்கு
நன்றாகத் தெரியும்.
என் உழைப்பு குறித்து அடிமட்ட சாதாரண கட்சித் தொண்டனுக்குக் கூடத் தெரியும். என்னைப் போல் எத்தனையோ பேர் கட்சிக்காக உழைத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், எந்த நிமிடத்திலும் அவர்களை தயவு தாட்சண்யம் இன்றி தூக்கியெறிய ஜெயலலிதா தயங்குவதில்லை. எங்களுக்கும் மானம் இருக்கிறது. மரியாதை இருக்கிறது. சுயமரியாதை இருக்கிறது. ஆனால், அதையெல்லாம் துச்சமென மதித்து தூக்கி எறிபவர் முதல்வர்.
பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று பேசுகிறார் அவர். நான் கேட்கிறேன், பெண்ணான எனக்கு இப்போது பாதுகாப்பு இருக்கிறதா? ஓட ஓட விரட்டுகிறீர்களே… டெல்லி வரை விரட்டுகிறீர்களே? ஜாமீனுக்காக கையேந்தி நான் நிற்க வேண்டிய அவசியம் என்ன? உண்மையில் என்மீதும் என் குடும்பத்தினர்மீதும் வழக்குத் தொடுத்திருக்கும் பெண்கள் அதிமுக-வினரால் மிரட்டப்பட்டு புகார் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இது முதலமைச்சருக்கும் எனக்கும் நடக்கும் போட்டியா? நான் தோற்கிறேனா? இல்லை, முதல்வர் தோற்கிறாரா? என்று பலப்பரீட்சை பார்கிறார்களா?” என்று குமுறிய சசிகலா புஷ்பா ஆவேசத்தோடு ஒரு கடிதத்தை எடுத்துக் செய்தியாளர்களிடம் காட்டினார்.
“இதில் ‘உன்னை கொலை செய்ய நான் டெல்லியில் வந்து தங்கியிருக்கிறேன். நான் அதிமுக உறுப்பினர்’ என்று ஒரு மிரட்டல் கடிதத்தை ஒருவர் முகவரியோடு எனக்கு எழுதியிருக்கிறார். இதுதான் அதிமுக-வா? இதுபோன்ற கொலை மிரட்டல்கள் எனக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. எனக்கு எது நடந்தாலும் அதற்கு தமிழக முதல்வர் அவர்கள்தான் பொறுப்பு. பாராளுமன்ற கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமையோடு முடிகிறது. அதன் பிறகு இவளால் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறார்களா முதல்வர் அவர்கள்? அப்படி நான் என்ன தவறு செய்துவிட்டேன்? கடந்த வருடம் கின்னஸ் ரெக்கார்ட் வாங்கிக் கொடுத்ததற்கு அழைத்து பாராட்டுனீர்கள். இந்த வருடம் என்னை அழைத்து அசிங்கப்படுத்தி, கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் எழுதி வாங்கியிருக்கிறீர்கள். இதுதான் என் உழைப்புக்கு நீங்கள் கொடுத்த பரிசா?” என்று குமுறித் தீர்த்திருக்கிறார்.மின்னம்பலம .கம

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக