வியாழன், 11 ஆகஸ்ட், 2016

இஷா யோக ஜாக்கி விசாரணையின் போது பாஜக எச்.ராஜா ஆஜார்.. .. நீதிபதி விசாரணையில் குறிக்கிடும் மோடியின் கூஜா ராஜா

ஈஷா யோகா மையத்தில் மாவட்ட நீதிபதி நேரில் விசாரணை செய்யும்போது, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சென்றதால் பரபரப்பு நிலவியது. ஈஷா யோகா மையத்தில் தங்களது இரண்டு மகள்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளதாக காமராஜ் - சத்தியஜோதி தம்பதியினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2 பெண்களிடமும் விசாரணை நடத்தி நாளை (வியாழக்கிழமை) மாலைக்குள் அறிக்கை சமர்பிக்குமாறு கோவை முதண்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும், விசாரணையின்போது கோவை மாவட்ட எஸ்.பி. மற்றும் பெற்றோர்களை உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதன்படி இன்று கோவை மாவட்ட நீதிபதி பொங்கியப்பன், மாவட்ட கலெக்டர் ஹரிகரன், மாவட்ட எஸ்.பி. ரம்யா பாரதி ஆகியோர், கோவையில் இருந்து 22 கி.மீ. தொலைவில் பூண்டியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, ஈஷா யோகா மையத்திற்குள் சென்றுள்ளதால் இந்த வழக்கில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. -அருள்குமார்  nakkeeran.in

கருத்துகள் இல்லை: