சனி, 26 மார்ச், 2016

வீரமணி : மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் பாலத்தை முடக்கியது ஏன்?

சென்னை, மார்ச் 26- முன்னணி கப்பல் நிறுவனங்கள் மட்டுமின்றி, பெரும்பாலான வர்த்தகர்களையும் அதானி குழுமம், காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு இழுத்துள்ளதால், சென்னை துறைமுகம் மேலும் நலிவடைந்து, மூடுவிழாவை நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.சென்னை, எண்ணூர் அருகே உள் ளது காட்டுப்பள்ளி துறைமுகம். இதை, `எல் அண்டு டி’நிறுவனத்தின் துணை நிறுவனமான, `எல் அண்டு டி -ஷிப் பில்டிங்’ நிர்வகித்து வந்தது. 2015ல்,அதானி குழுமம் இந்த துறை முகத்தை கையகப்படுத்தியது. அத்துடன், வர்த்தகத்தை மேம்படுத்தபல முயற்சிகளை எடுத்து வருகிறது.

காட்டுப்பள்ளி துறைமுகம் சென்னையில் இருந்து, 35 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஆந்திரா,பெங்களூருவுக்கு, ஒரே நாளில் செல்ல முடியும்.
ஆழ்கடல் துறைமுகம் என்பதால், தற்போதையநிலவரப்படி, 710 மீ. நீளமுடைய, இரண்டு கப்பல்களை நிறுத்தும் வசதிகள் உள்ளன.
ஆண்டுக்கு, 12 லட்சம் சரக்குப் பெட்டகங்களை கையாளும் வசதி உடையது. இரண்டு நவீனகிரேன்கள் உட்பட எட்டு கிரேன்கள் உள்ளன.
24 மணி நேர சுங்கத்துறை பரிசோ தனை,போக்குவரத்துக்கான வசதிகளும் உள்ளன.வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியாக, கப்பல்நிறுவனங்கள், வர்த்தகர்களை அழைத்து, அதானி குழுமம் ஆலோசனை நடத்தியது. காட்டுப்பள்ளிதுறைமுகத்தில் உள்ள நவீன வசதிகளை எடுத்துக்கூறிய அதிகாரிகள், சரக்கு கையாளும் கால அளவுகுறையும்; காத்திருப்பு நிலை இருக்காது என,வர்த்தகர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தனர்.
சென்னை துறைமுகத்துக்கு பெரும் சிக்கல்!
இதை ஏற்ற, நான்கு முன்னணி நிறுவனங்கள்,காட்டுப்பள்ளி துறைமுகம் வழியாக வர்த்தகத்தைமேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளன.
மேலும்,பல வர்த்தகர்களும் காட்டுப்பள்ளி பக்கம் திரும்பிஉள்ளனர். இது, சென்னை துறைமுகத்திற்கு பெரும்சிக்கலாக அமையும்.
சென்னை துறைமுகம், 150 ஆண்டுகளை கடந்தபாரம்பரியமுடைய தாக இருந்தாலும், நிலக்கரி,இரும்புத்தாது போன்றவற்றை கையாள, உச்சநீதி மன்றம் தடை விதித்ததால், பெருமளவு வருமானத்தைஇழந்து, நலிவைச் சந்தித்து வருகிறது.
தற்போது, காட்டுப்பள்ளி துறைமுக வளர்ச்சியால்வர்த்தகர்கள், கப்பல் நிறுவனங்கள் அங்கு செல்வதால், சென்னை துறைமுகம் தற்போது உள்ள வர்த்தகப் பயன்பாடும் குறைந்து, மூடுவிழாவை நோக்கிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணைஅமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் உள்ள நிலையில், சென்னை துறைமுகத்திற்கு மூடு விழா காண வழிவகுக்காமல், காப்பாற்றத்தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்பதே தொழிற்துறையினரின் எதிர்பார்ப்பு.
சென்னை துறைமுகத்தின் உள் ளேயும், வெளியேயும் போதிய சாலை கட்டமைப்புகள் இல்லாததால்,நெரிசல் நீடிக்கிறது. சரக்குப் பெட்டகங்கள் உள்ளே செல்ல, மூன்று நாட்கள் காத்திருக்க நேரிடுகிறது.
மூன்றாண்டுகளாக முடங்கிக் கிடக்கும் மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம்!
துறைமுகத்திற்கு வெளியே நெரிசலுக்குத் தீர்வுகாண கொண்டு வரப்பட்ட சென்னை - மதுரவாயல் மேம்பால சாலைத் திட்டம், தமிழக அரசின் தடையால், மூன்று ஆண்டுகளாக முடங்கி உள்ளது.  சென்னை - எண்ணூர் துறை முகங்கள் இணைப்புச் சாலை திட்டப் பணிகள் துவங்கி, 10 ஆண்டுகளாகியும் முடியவில்லை.  திருவொற்றியூரில் அமைக்கப்பட்ட, சரக்குப்பெட்டக நிறுத்த முனையமும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
இதுபோன்ற சிக்கல்களே சென்னை துறைமுகத்தை விட்டு, கப்பல் நிறுவனங்கள், வர்த்தகர்கள் காட்டுப்பள்ளி துறைமுகம் தாவக் காரணமாக அமைந்துள்ளன.

கருத்துகள் இல்லை: