ஞாயிறு, 20 மார்ச், 2016

நடிகர் சிங்கமுத்து களத்தில் விஜயகாந்துக்கு எதிராக ....

தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகள் விரைவில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கும். ஒவ்வொரு கட்சியும் தங்களது நிர்வாகிகள், தொண்டர்கள் களத்தில் இறக்கி விடும்.  இதே போல நடிகர் - நடிகைகளும் தாங்கள் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தையே குறி வைத்து பிரசாரம் செய்தார். இதில் விஜயகாந்தை தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் கிண்டல் செய்து பேசினார்.


தற்போது விஜயகாந்துக்கு எதிராக நடிகர் சிங்கமுத்து களம் இறங்கி உள்ளார். அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் நடிகர் சிங்கமுத்து, விருகம்பாக்கம், மதுரவாயல், திருப்பத்தூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்து உள்ளார்.

அவர் விஜயகாந்தை கிண்டலடிக்கும் வீடியோ வாட்ஸ் - அப்பில் பரவி வருகிறது. வடிவேலு பாணியில் கிண்டல் செய்து பேசும் சிங்கமுத்து, கூட்டணியில் தொகுதி பங்கீடு பற்றி விஜயகாந்த் எப்படி பேசுவார் என்று அவரை போல் மிமீக்ரி செய்கிறார்.  அதில் சிங்கமுத்து கடைசியில் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விடுவது போல் அந்த வீடியோ முடிகிறது.

மேலும் விஜயகாந்த் பற்றி கருத்து தெரிவித்த அவர், பெதுக்கூட்டத்தில் விஜயகாந்த் காமெடியாக பேசுவதால் அதை கேட்க தான் கூட்டம் கூடுகிறது என்றார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிங்கமுத்து தி.மு.க. வையும், விஜயகாந்தையும் நகைச்சுவை பாணியில் கிண்டலடித்து பிரசாரம் செய்தார்.

இதே போல் இந்த தேர்தலிலும் எதிர்க்கட்சிகளை குறிப்பாக விஜயகாந்தை குறிவைத்து அவரது பிரசாரம் இருக்கும்.

விஜயகாந்த் செயல்பாடு பற்றி சிங்கமுத்து கூறும் வார்த்தைகள் மக்களிடம் சிரிப்புடன் செல்லும் என்று அ.தி.மு.க.வினர் கருதுகிறார்கள்.  இதனால் விஜயகாந்துக்கு எதிராக அவர் களம் இறங்கு வது நிச்சயம் என்று கூறப்படுகிறது. மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: