வெள்ளி, 25 மார்ச், 2016

2030 பெட்ரோல் வாகனங்களே இருக்காது...மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்


புதுடெல்லி, இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் வரும் 2030-ம் ஆண்டிற்குள் பெட்ரோல் வாகனங்களே இல்லாத நாடாக மாறும் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதற்காக, எல்க்ட்ரிக் கார்களை முன்பணம் இன்றி வழங்கும் திட்டம் ஒன்றையும் மத்திய அரசு உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்தார். இதற்கு நமக்கு அரசாங்கத்திடம் இருந்து ஒரு பைசா கூட உதவி தேவையில்லை. பொதுமக்களிடம் இருந்தும் ஒரு ரூபாய் கூட முதலீடு தேவையில்லை. பொதுமக்களுக்கு எலக்ட்ரிக் கார்களை ஜீரோ டவுண் பேமண்ட்டில் வழங்க இயலும். மிகக்குறைந்த செலவில் உங்கள் கார்களை சார்ஜ் செய்ய முடிந்தால் பெட்ரோல் செலவு மிச்சமாகும். அந்த சேமிப்புத் தொகையை பொதுமக்கள் எலக்ட்ரிக் காரை வாங்க பயன்படுத்தலாம்.


கடந்த 2014 பிப்ரவரி மாதத்தில் எல்.இ.டி பல்புகளின் சந்தை மதிப்பு ரூ.310-ஆக இருந்தது. ஆனால், மத்திய அரசின் கொள்முதலுக்கு பிறகு தற்போது ரூ.64.41-ஆக குறைந்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களின் கீழ் இதுவரை 8.32 கோடி எல்.இ.டி பல்புகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு தீர்வுகளை செயல்படுத்தி வருவதில் உலகிலேயே இந்தியாதான் முன்னிலையில் உள்ளது என்பதை நாம் நினைவு கூர வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். chennaionline.com

கருத்துகள் இல்லை: