செவ்வாய், 22 மார்ச், 2016

வெளிநாட்டு பெண்களின் சுற்றுலா வருகையில் பெரும் வீழ்ச்சி...டெல்லி சம்பவத்தால் அச்சம்


டெல்லி ஜோதி சிங் பாலியல் வன்முறை  சம்பவத்திற்கு பிறகு இந்தியாவில்
தங்களின் பாதுகாப்பு குறித்து ஏற்பட்ட அச்சத்தால் சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்களின் எண்ணிக்கை சரிந்துவிட்டதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் ஜோதி சிங் என்ற கல்லூரி மாணவி (நிர்பயா) ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது சர்வதேச நாடுகள் வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிகளுக்கு தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டது. இது இந்திய சுற்றுலாத் துறையையும் கடுமையாக பாதித்துள்ளது.



மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் புள்ளி விபரப்படி 2013-ம் ஆண்டு 11.6 சதவீதமாக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பெண் பயணிகளின் எண்ணிக்கை, 2014-ம் ஆண்டில் 2014-ம் ஆண்டில் 9.7 சதவீதமாக குறைந்துள்ளது.

2014-ம் ஆண்டு மட்டும் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிகளுக்கு எதிராக 384 குற்றங்கள் நடந்துள்ளது. இந்தியாவில் டெல்லி, கோவா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் நாள்தோறும் சுற்றுலா பயணிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பதிவாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: