கோவை,மார்ச் 24 (டி.என்.எஸ்) தேமுதிக-வுடன் மக்கள் நலக் கூட்டணி
இணைந்துள்ளதால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட, தற்போது ம.ந.கூ மற்றும்
தேமுதிக இடையே உறசல் ஏற்பட ஆரம்பித்துள்ளது, மேலும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் நல கூட்டணி, இனி விஜயகாந்த் கூட்டணி, என்று வைகோ, திருமாவளவன் ஆகியோர் கூறிய நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, அப்படி ஏதும் இல்லை, என்று மறுத்துள்ளார்.
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் உடுமலையில் சங்கர் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இவரது மனைவி கெளசல்யாவை சந்திப்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவருமான ஆர்.நல்லக்கண்ணு இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
பாதிக்கப்பட்ட கெளசல்யாவுக்கு இயக்கத்தின் சார்பில் ரூ.30 ஆயிரம் நிதியுதவி அளித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நல்லக்கண்ணு, "சாதி ஆணவக் கொலைகள் தமிழ்நாட்டுக்கு தலைகுனிவு ஏற்படுத்தியுள்ளன. பெரியார், அம்பேத்கர், சிங்காரவேலர் போன்றோர் உருவாக்கிய சமூகத்தில் சாதியின் பெயரால் அழிவை ஏற்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. காதலித்து திருமணம் செய்து கொண்ட காரணத்துக்காக 8 மாதங்கள் கழித்து ஆணவக் கொலையை நிகழ்த்தியுள்ளனர். இந்த உயிரிழப்பு காவல்துறையின் காலதாமதத்தினால் ஏற்பட்ட விளைவு. தமிழகத்தில் சங்கரின் படுகொலை ஆணவக் கொலைகள் பட்டியலில் 81வது சம்பவம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுத்து நிறுத்த தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நல்லக்கண்ணு, "தேமுதிக இணைந்திருப்பதால் மக்கள் நலக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. மாற்றுக் கொள்கையை முன்னிலைப்படுத்தி, ஊழல், மது, ஆணவக் கொலைகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிராக இருக்கிறோம். மக்கள் நலக்கூட்டணியை விஜயகாந்த் சந்தித்து தொகுதி பங்கீடு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இக்கூட்டணியை விஜயகாந்த் கூட்டணி என்று அவரும் கூறவில்லை. நாங்களும் கூறவில்லை" என்றார்.
"மக்கள் நலக்கூட்டணியின் 4 கட்சிகளுக்கு குறைவான இடங்கள் கிடைத்தாலும், பாஜக, காங்கிரஸை முறியடிக்க வேண்டும். 50 வருடங்களாக ஊழலில் திளைக்கும் திமுக, அதிமுகவை அகற்ற வேண்டும் என்ற எங்களின் கொள்கையையே அவரும் முன்னெடுத்திருக்கிறார். அதன் காரணமாகவே விஜயகாந்த் எங்களுடன் இணைந்திருக்கிறார்.
ரூ.29 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது என்பதற்காக மதுவை ஏற்றுக் கொள்ள முடியாது" என்றார் நல்லக்கண்ணு” என்று தெரி /tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக