செவ்வாய், 22 மார்ச், 2016

அதிமுக பேச்சாளர்கள் விஜயகாந்த் பிரேமா குறித்து பேச தடை...கோபத்தில கோபாலபுரம் போயிட்டா? இன்னா ராசதந்திரம்?

தே.மு.தி.க., மற்றும் அக்கட்சி தலைமை குறித்து பேச, அ.தி.மு.க.,வினருக்கும், அக்கட்சி பேச்சாளர்களுக்கும், முதல்வர் ஜெயலலிதா தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.
கடந்த, 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, தே.மு.தி.க., போட்டியிட்டது. இதில், 29 தொகுதிகளில், அக்கட்சி வெற்றி பெற்றதுடன், தி.மு.க.,விடம் இருந்த, எதிர்க்கட்சி அந்தஸ்தையும் தட்டிப் பறித்தது. அடுத்த சில மாதங்களிலேயே, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து தே.மு.தி.க., கழற்றி விடப்பட்டது.  தேன்குடிச்ச நரி சாராயமும் குடிச்ச மாதிரி அந்த ஆளு எல்லாரையும் என்னா பாடு படுத்துறார்? கொஞ்ச நாளு ஆட்சியை இதுகிட்ட கொடுத்து பார்க்கணும்....கோவிந்தா கோவிந்தா..  

இதைத்தொடர்ந்து, அ.தி.மு.க., - தே.மு.தி.க.,வினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தே.மு.தி.க.,வில் இருந்து, ஏழு எம்.எல்.ஏ.,க்களை பிரித்து, தன் பக்கம் இழுத்துச் சென்றார் ஜெயலலிதா.

இந்நிலையில், சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., எடுக்கும் முடிவுகளைவைத்து கூட்டணி அமைப்பதற்கு அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டிருந்தது. ஆனால், தனது தலைமையில் கூட்டணி அமைப்பதற்கு விஜயகாந்த் முடிவு செய்து விட்டார். இதனால், அ.தி.மு.க.,வின் எதிர்ப்பு ஓட்டுகள் சிதறும் என்பதால், விஜயகாந்த் முடிவை, அ.தி.மு.க.,வும் கொண்டாடுகிறது. இதனால், விஜயகாந்தையும்; அவரது கட்சியையும் விமர்சிக்க வேண்டாம் என, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, தே.மு.தி.க., குறித்தும், அக்கட்சி தலைமை குறித்தும், பொதுக்கூட்ட மேடைகளில் அ.தி.மு.க.,வினர்பேசுவதே இல்லை. கட்சியின் சாதனை பட்டியலை மட்டுமே வாசிக்கின்றனர். தி.மு.க., - -காங்., கூட்டணியை மட்டுமே கடுமையாக விமர்சிக்கின்றனர்.

இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:தே.மு.தி.க.,வின் நிலைப்பாடு, அ.தி.மு.க.,விற்கு சாதகமானது. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. விஜயகாந்தை கோபப்படுத்தினால், அவரது நிலைப்பாடு மாறுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, அவரைப் பற்றியும், பிரேமலதா குறித்தும், எந்த விமர்சனத்தையும் வைக்க வேண்டாம் என்று, அ.தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது. தே.மு.தி.க.,வில் இருந்து ஆள் இழுப்புக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.


-- நமது சிறப்பு நிருபர்- -  தினமலர்.com

கருத்துகள் இல்லை: