விகடன்,com :தி.மு.க.
உடன்தான் அணி சேருவார்... இல்லை பா.ஜ.க.வுடன்தான் விஜயகாந்த் போவார் என
கடந்த சில மாதங்களாகவே விஜயகாந்தை மையப்படுத்தி ஏராளமான யூகங்கள்
செய்திகளாக வலம் வந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்,
கட்சியின் மகளிர் தின பொதுக்கூட்டத்தில் தனித்து போட்டி என அறிவித்தார்
விஜயகாந்த்.
விஜயகாந்த் பேச்சை முடித்த உடன், எங்களோடு வந்து இணையும் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திப்போம் என அறிவித்தார் பிரேமலதா. இந்நிலையில் மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க. இணைய காரணமாக இருந்த பிரேமலதாவுக்கு நன்றி தெரிவித்து அதை நேற்று உறுதி செய்தார் வைகோ. வைகோவின் சொல்லை கேட்டு அரசியல் நடத்தி முதலுக்கு மோசமானவங்க லட்சகணக்கா இருக்காங்க....கொஞ்சம் தெற்கு நோக்கி பாருங்க கதை கதையா சொல்லுவாங்க....திட்டுவாங்க சாபம் கொடுப்பாங்க....
இந்நிலையில் பிரேமலதா சொல்லியதுதான் இப்போது நடக்கிறது. மக்கள் நலக்கூட்டணியோடு இணையும் முடிவை... இல்லை இல்லை... தங்களோடு மக்கள் நலக்கூட்டணியை இணைத்துக்கொள்ளும் முடிவை எடுத்தது பிரேமலதாதான். இப்போது அல்ல, இனி தே.மு.தி.க. குறித்து முடிவுகளை எடுக்கப்போவது பிரேமலதாதான் என்கிறது தே.மு.தி.க. வட்டாரங்கள். விஜயகாந்த் இனி தே.மு.தி.க.வின் அடையாளமாகத்தான் இருப்பாரே தவிர தலைவராக இல்லை என்றும் சொல்கிறார்கள் தே.மு.தி.க.வினர்.
''அதற்கான அத்தனை அறிகுறிகளும் தற்போது தெரிய ஆரம்பித்து விட்டன.
தே.மு.தி.க.வும், மக்கள் நலக்கூட்டணியும் அணி சேர்ந்துள்ள செய்தியோடு
நீங்கள் இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும். ஒன்று கூட்டணி முடிவான உடன்
வைகோவின் பேச்சு. நாங்கள் பஞ்ச பாண்டவர்கள் என்றும், அதில் விஜயகாந்த்
தர்மர் என்றும் சொன்ன வைகோ, "நாங்கள் தர்மரை நெருங்கவிட மாட்டோம். அவருக்கு
அர்ஜூனனும் (வைகோ), பீமனும் (திருமாவளனும்) பக்க பலமாக இருக்கிறோம்.
அதற்கு முன் நகுலனும், சகாதேவனும் இருக்கிறார்கள். எந்த கேள்வி
வேண்டுமானாலும் கேளுங்கள். எங்களை தாண்டிதான் அவரிடம் போக வேண்டும்" என
பேசியிருக்கிறார். அதாவது, இனி விஜயகாந்த் எதையும் பேசமாட்டார். அதற்குதான்
நாங்கள் இருக்கிறோம் என்பதுதான் வைகோவின் பேச்சில் புரிந்துகொள்ள
முடிகிறது.
இரண்டாவது, கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்ட நாளில் தே.மு.தி.க. வெளியிட்ட பொதுக்கூட்ட அறிவிப்பு. தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் 10 மாநகராட்சியில் நடக்கும் என்றும், 10 பொதுக்கூட்டங்களிலும் பிரேமலதா பங்கேற்று பேசுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சாதாரண பொதுக்கூட்டங்களிலேயே விஜயகாந்த்தும், பிரேமலதாவும் இணைந்து பேசுவதுதான் வழக்கம். ஆனால் மிக முக்கிய நிகழ்வான தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை. அதேபோல் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் தென் மாவட்டங்களில் நடக்கும் பிரசாரத்தில் சுதிஷூம், சந்திரகுமாருமே பங்கேற்கிறார்கள்.
இனி விஜயகாந்த் எங்கும் செய்தியாளர்களை சந்திக்க மாட்டார். பொதுக்கூட்டங்களில் முன்பைபோல விஜயகாந்த் பேச மாட்டார். அப்படியே பேசினாலும் அது மிக குறைவாகவே இருக்கும். தேர்தல் பிரசார கூட்டங்களில் விஜயகாந்த்தின் முகம் இருக்கும். இனி பிரேமலதாதான் மாநிலம் தழுவிய பிரசாரத்தை முன்னெடுப்பார். அதன் முதல் கட்டம்தான் தேர்தல் விளக்கப் பொதுக்கூட்டம்.
தேர்தல் நேரத்தில் விஜயகாந்த் பிரசாரம் செய்வார். ஆனால் அவர் முன்புபோல் பேச மாட்டார். எழுதி வைத்து படிக்க தெரியாத விஜயகாந்த், இனி மிக சுருக்கமாக பேச்சை முடித்துக்கொள்வார். அதில் அரசியல் விமர்சனம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை" என்கிறார்கள் தே.மு.தி.க. நிர்வாகிகள்.
சமீபகாலங்களில், விஜயகாந்தின் பேச்சுக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி
வருகிறது. இனி அவர் பேசாமல் இருப்பதுதான் நல்லது என தே.மு.தி.க.வும்,
மக்கள் நலக்கூட்டணியும் நினைக்கிறது. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானபோதே
வைகோ சொல்லியதைதான் விஜயகாந்த் திரும்ப சொன்னார்.
அதன் பின்னர் இனி விஜயகாந்த் பேச மாட்டார். நாங்கள்தான் பேசுவோம் என்ற தொணியில் வைகோ செய்தியாளர்களிடம் முழங்கினார். இதுவரை விஜயகாந்த்தோடு மேடை ஏறி வந்த பிரேமலதா, தனியாக மேடை ஏற துவங்கி விட்டார். தேர்தல் வெற்றிக்கு விஜயகாந்த்தின் முகமாக மட்டும் இருந்தால் போதும் என நினைத்து விட்டார்கள் போல...!
- ச.ஜெ.ரவி
விஜயகாந்த் பேச்சை முடித்த உடன், எங்களோடு வந்து இணையும் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திப்போம் என அறிவித்தார் பிரேமலதா. இந்நிலையில் மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க. இணைய காரணமாக இருந்த பிரேமலதாவுக்கு நன்றி தெரிவித்து அதை நேற்று உறுதி செய்தார் வைகோ. வைகோவின் சொல்லை கேட்டு அரசியல் நடத்தி முதலுக்கு மோசமானவங்க லட்சகணக்கா இருக்காங்க....கொஞ்சம் தெற்கு நோக்கி பாருங்க கதை கதையா சொல்லுவாங்க....திட்டுவாங்க சாபம் கொடுப்பாங்க....
இந்நிலையில் பிரேமலதா சொல்லியதுதான் இப்போது நடக்கிறது. மக்கள் நலக்கூட்டணியோடு இணையும் முடிவை... இல்லை இல்லை... தங்களோடு மக்கள் நலக்கூட்டணியை இணைத்துக்கொள்ளும் முடிவை எடுத்தது பிரேமலதாதான். இப்போது அல்ல, இனி தே.மு.தி.க. குறித்து முடிவுகளை எடுக்கப்போவது பிரேமலதாதான் என்கிறது தே.மு.தி.க. வட்டாரங்கள். விஜயகாந்த் இனி தே.மு.தி.க.வின் அடையாளமாகத்தான் இருப்பாரே தவிர தலைவராக இல்லை என்றும் சொல்கிறார்கள் தே.மு.தி.க.வினர்.
இரண்டாவது, கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்ட நாளில் தே.மு.தி.க. வெளியிட்ட பொதுக்கூட்ட அறிவிப்பு. தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் 10 மாநகராட்சியில் நடக்கும் என்றும், 10 பொதுக்கூட்டங்களிலும் பிரேமலதா பங்கேற்று பேசுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சாதாரண பொதுக்கூட்டங்களிலேயே விஜயகாந்த்தும், பிரேமலதாவும் இணைந்து பேசுவதுதான் வழக்கம். ஆனால் மிக முக்கிய நிகழ்வான தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை. அதேபோல் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் தென் மாவட்டங்களில் நடக்கும் பிரசாரத்தில் சுதிஷூம், சந்திரகுமாருமே பங்கேற்கிறார்கள்.
இனி விஜயகாந்த் எங்கும் செய்தியாளர்களை சந்திக்க மாட்டார். பொதுக்கூட்டங்களில் முன்பைபோல விஜயகாந்த் பேச மாட்டார். அப்படியே பேசினாலும் அது மிக குறைவாகவே இருக்கும். தேர்தல் பிரசார கூட்டங்களில் விஜயகாந்த்தின் முகம் இருக்கும். இனி பிரேமலதாதான் மாநிலம் தழுவிய பிரசாரத்தை முன்னெடுப்பார். அதன் முதல் கட்டம்தான் தேர்தல் விளக்கப் பொதுக்கூட்டம்.
தேர்தல் நேரத்தில் விஜயகாந்த் பிரசாரம் செய்வார். ஆனால் அவர் முன்புபோல் பேச மாட்டார். எழுதி வைத்து படிக்க தெரியாத விஜயகாந்த், இனி மிக சுருக்கமாக பேச்சை முடித்துக்கொள்வார். அதில் அரசியல் விமர்சனம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை" என்கிறார்கள் தே.மு.தி.க. நிர்வாகிகள்.
அதன் பின்னர் இனி விஜயகாந்த் பேச மாட்டார். நாங்கள்தான் பேசுவோம் என்ற தொணியில் வைகோ செய்தியாளர்களிடம் முழங்கினார். இதுவரை விஜயகாந்த்தோடு மேடை ஏறி வந்த பிரேமலதா, தனியாக மேடை ஏற துவங்கி விட்டார். தேர்தல் வெற்றிக்கு விஜயகாந்த்தின் முகமாக மட்டும் இருந்தால் போதும் என நினைத்து விட்டார்கள் போல...!
- ச.ஜெ.ரவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக