சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய
இளங்கோவன், "திருச்சியில் நாளை நடைபெறும் சமூகநீதி மாநாட்டில் தவிர்க்க
முடியாத காரணத்தால் ராகுல் காந்தியால் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனால், அவர்
வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி
இன்னும் 2 நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. பேச்சுவார்த்தை
நடத்துவதற்காக காங்கிரஸ் குழுவை இன்று அல்லது நாளை மேலிடம் அறிவிக்கும்.
தி.மு.க. கூட்டணிக்கு விஜயகாந்த் வர வேண்டும் என்று விரும்பினோம். அதற்காக
நாங்கள் அழைப்பும் விடுத்தோம். விஜயகாந்த் வரவில்லை. எனவே நாங்கள் அவரை
விட்டு விட்டோம். ஜெயலலிதாவை வீழ்த்தும் எண்ணத்தில் இருக்கும் விஜயகாந்த்,
தி.மு.க. அணிக்கு வராததற்கான காரணம் என்னவென்று கேட்கிறீர்கள். சில
விஷயங்களை வெளியில் சொல்ல இயலாது. இதிலென்ன பெரிய ரகசியம் வேண்டி கிடக்கறது? ஊருக்கே தெரியும் நடந்தது.... சூட்கேஸ்+ சு.சாமி: திமுகவை புளோக் பண்ணுங்கோ...அவா ஆச்சிக்கு வரப்படாது....ஜெயா சீக்கிரம் ஜெயிலுக்கு போயிடுவா ஆனா திமுகதான் நேக்கு புரோபளம்.... நால்வர் கூட்டணிக்கு இரண்டு சதவீத வாக்குகள் கூட இல்லை. அவர்களை உடைக்க முயற்சி செய்வதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. அந்த கூட்டணியில் இருக்கும் வைகோ எதை சொன்னாலும் அதற்கு நேர்மாறாக முடிவு இருக்கும். கடந்த 30 ஆண்டுகளாக இதுதான் நடந்து வருகிறது" என்று கூறினார்.
>சொ.பாலசுப்பிரமணியன் விகடன்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக