வியாழன், 24 மார்ச், 2016

அ.தி.மு.க., நேர்காணல்: வசூல் வேட்டை, குற்றப் பின்னணி கிரிமினல்கள் தான் அதிகம் செலவு செய்ய ரெடி.....

அ.தி.மு.க.,வில், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களில் தகுதி இல்லாதவர்களும், வசூல் வேட்டையாடியுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளையும், குற்றப் பின்னணி சிக்கியவர்களையும் அழைத்துள்ளதால், தி.மு.க., தலைமை உற்சாகமடைந்து உள்ளது புது முகங்கள்: வலுவான கூட்டணி அமைக்கவில்லை என்றால், ஆளுங்கட்சியை சுலபமாக வீழ்த்த முடியாது என, தி.மு.க., தலைமை கருதுகிறது. இதனால், ஆளுங்கட்சியின் பலவீனத்தை
மையமாக வைத்து, அக்கட்சியை தோல்வி அடைய வைக்கும் வியூகங்கள், தி.மு.க.,வில் வகுக்கப்பட்டு வருகின்றன. குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாத, புது முகங்களை கொண்ட வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என, தி.மு.க., மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை முன்னிலைப்படுத்தக்கூடிய, 'ஒன்மேன் குரூப்' மூலமாக, வேட்பாளர்களை தேர்வு செய்ய, மாவட்ட வாரியாக அனுப்பி, தேர்வு செய்யும் பணி நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், ஆளுங்கட்சியில் நடத்தப்பட்ட நேர்காணலில் இடம் பெற்றவர்களில் சிலர், தகுதி இல்லாதவர்கள் உள்ளனர்.


வேட்பாளர் தேர்வு:
குறிப்பாக, குற்றப் பின்னணி கொண்டவர்களும், பொதுமக்களிடம் மக்கள் நலப் பணிகளை சரிவர செய்யாமல் முதல்வர் ஜெயலலிதாவிடம், 'டோஸ்' வாங்கியுள்ளநகரசபை தலைவர்களும், வசூல் வேட்டை நடத்தியுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளும், ஒன்றிய செயலர்களும் இடம் பெற்றுள்ளனர். இப்படி, ஆளுங்கட்சி தலைமை நடத்திய நேர்காணலில், இடம் பெற்ற, 'டம்மி வேட்பாளர்கள் , யார் என்ற பட்டியலை, யார் மாவட்ட வாரியாக எடுத்து தருவதற்கு, தி.மு.க., மாவட்ட செயலர்களுக்கு, அக்கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட செயலர்கள் தரும் பட்டியலில் இடம் பெற்றவர்கள், அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அவர்களுடைய குற்றச்சாட்டுகளை குறித்த பட்டியலை தேர்தல் பிரசாரத்தில் முன்னிலைப்படுத்தி, தி.மு.க., வேட்பாளர்ளுக்கு ஆதரவு திரட்டவும் தி.மு.க., தரப்பில் திட்டமிடப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை: