சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக., கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை
தொகுதி ஒதுக்குவது என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம்
பெற்றுள்ள காங்., கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத்
இன்று சென்னை வந்தார். கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு ஆசாத்
சென்றார். இவருடன் காங்., தலைவர் இளங்கோவன், முகுல் வாஸ்னிக்,
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடன் சென்றனர். கூட்டணியில்
காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்ற பேச்சுவார்த்தை நடந்தது.
கடந்த சட்டசபை தேர்தலில் ஒதுக்கியது போல் 63 தொகுதிகள் வேண்டும் என
காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த முறை 30 தொகுதிகள் வரை
மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக., தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இதன்
பிறகு 40 தொகுதிகளாவது வேண்டும் என காங்., கேட்பதாக தகவல்கள் வந்தன.
பாமக., வந்தாலும் வரலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் பாமகவுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டியது வந்தால் காங்கிரசுக்கு வழங்கப்படும் தொகுதிகள் குறையும் என்றும் கூறப்படுகிறது.
கருணாநிதியை சந்தித்த பின்னர் குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறுகையில்:
கருணாநிதியை சந்தித்து முதல் கட்ட பேச்சு நடந்துள்ளது. இது இன்னும் பேச்சு நடக்கவுள்ளது.
*தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசித்தேன்.
*காங். கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என முடிவாகவில்லை.
* எங்கள் கூட்டணியில் மேலும்சில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ஆசாத் பேசினார்.
மு.க., ஸ்டாலின் பேட்டி : திமுக பொருளாளர் ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில்: குலாம் நபியுடனான பேச்சு சுமுகமாக நடந்துள்ளது. வேறு கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைந்தால் முறைப்படி தெரிவிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார் தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக