தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள்
தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில்
தலைவர் நாசர் தலைமையில் நடந்தது. இதில் பல முக்கியமான விஷயங்கள்
நிறைவேற்றப்பட்டன. முதலாக நடிகர் சங்கத்தக்கு புதிய இணையதளம்
அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய நடிகர் சங்கம்
கட்டடத்தின் மாதிரியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாதிரியை நடிகர்
சிவகுமார் திறந்து வைத்தார்.
பின்னர் விஷால் கூறும்போது, ”புதிதாக கட்டப்படவிருக்கும் அந்த கட்டடத்தில் 1000 பேர் உட்காரும்படியான ஒரு பிரம்மாண்ட கலையரங்கம் உருவாகவிருக்கிறது. மேலும், இந்த கட்டடத்திற்குள் 900 பேர் அமரும்படியான ஒரு திருமண மண்டபமும், 300 பேர் அமரும்படியான திருமண மண்டபம் ஒன்றையும் கட்டவிருக்கிறோம். இதில், 300 பேர் அமரக்கூடிய திருமண மண்டபத்தை உறுப்பினர்களுக்கு இலவசமாகவும், 900 பேர் அமரக்கூடிய திருமண மண்டபத்தை பொதுமக்களுக்கு வாடகைக்கு விடவும் முடிவு செய்துள்ளோம்.
மேலும், 150 பேர் அமர்ந்து பார்க்கும்படியான பிரிவியூ தியேட்டர் ஒன்றும் இந்த வளாகத்தில் அமையவிருக்கிறது. மேலும், ஜிம், நடனப் பயிற்சி, பேட்மிண்டன் பயிற்சி உள்ளிட்டவற்றுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 165 கார்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியும் உள்ளடக்கியுள்ளது. இதுவரை இந்த கட்டடம் கட்டுவதற்கு டெண்டர் விடப்படவில்லை. சிறந்த முறையில் கட்டுபவர்களுக்கும், குறைவான டெண்டருக்கு கேட்பவர்களுக்கும் இந்த கட்டடம் கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்படும்.
மேலும், இந்த கட்டடம் கட்டுவதற்காக நடத்தப்படும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒளிப்பரப்பு உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு ரூ.9 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கான செலவுகள் போக, ரூ.10 கோடி லாபம் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வளாகத்தில் அமைக்கப்படும் ஜிம்மில் உறுப்பினராக சேருவதற்கு ரூ.5 லட்சம் வசூலிக்கப்படும். இதில் சேருவதற்கு 40-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் சம்மதித்துள்ளனர். மேலும், நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு முன்னணி நடிகர்கள் இணைந்து இலவசமாக படம் பண்ண முடிவு செய்துள்ளோம். இவ்வாறு வரும் பணத்தை கொண்டு புதிய கட்டடம் கட்டப்படும்” என்று விஷால் கூறினார். aanthaireporter.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக