திங்கள், 21 மார்ச், 2016

அதிமுக கலெக்ஷன் விபரம் : 60% கட்சிக்கு, 20% மாவட்டத்துக்கு, 20% டெண்டர் அல்லக்கைகளுக்கு....

""ஹலோ தலைவரே... ஐவரணிக்கு ஆப்பு.. வீட்டுச் சிறைன்னு முதலில் சொன்னது நம்ம நக்கீரன்தான். இப்ப எல்லா மீடியாக்களிலும் அதுதான் முதலிடம் பிடிச்சிருக்குது.'' ""ஆமாப்பா… பிப்ரவரி 01-03 தேதியிட்ட நம்ம நக்கீரனிலே, ‘மெஜாரிட்டி சீட் ஜெயிக்காவிட்டாலும் 100க்கும் குறையாமல் அ.தி.மு.க ஜெயித்தாலும் அதற்கேத்த மாதிரி, தங்களால் பதவிக்கு வந்த 54 அ.தி.மு.க மா.செக்களும் சிபாரிசு செய்யும் நபர்களுக்கு சீட் கொடுத்து மா.செக்கள் செலவில் அவங்களை ஜெயிக்க வைக்க ணும்ங்கிறதுதான் ஐவரணியின் ப்ளான். எத்தனை பேர் ஜெயிக்கிறாங்களோ அதைப் பொறுத்து ஐவர் அணியோட செல்வாக்கு கட்சியில் இருக்கும். அதற்குத் தகுந்தபடி தேர்தல் வேலைகள் நடக்குதாம்னு நாம பேசியது அப்படியே வந்திருந்ததே!'' ""இந்த செய்திக்குப்பிறகுதான் ஐவரணி பக்கம் கார்டனோட கவனம் திரும்பி யிருக்குது. செமத்தியான கவனிப்பால் நொந்துபோய் கட்சிக்காரங்ககிட்டே வேதனையோடு முனகுது ஐவரணி தரப்பு.

சசிகலா சொந்தக்காரங்களுக்கு கட்சியிலே முக்கியத்துவம் தரணும்னு அந்தம்மா நினைச்சா அதை செஞ்சிட்டுப்போகட்டும். அதுக்காக எங்க மேலே ஊழல் புகார்களை சுமத்தி, மத்த எல்லாரும் உத்தமர்களா காட் டிக்க நினைச்சா நாங்களும் உண்மையைப் பேச வேண்டியிருக்கும்லன்னு சொல்றாங்களாம்.'' ""என்ன உண்மையாம்?'' ""விசுவாசிங்கிறதால ஓ.பி.எஸ்.கிட்ட கட்சி விவகாரங்களைத் தலைமை கொடுத்தது. அவர் ஒருத்தரால எல்லாத்தையும் சமாளிக்க முடிய லைன்னு நத்தம், வைத்திலிங்கம்னு கூடுதலா ரெண்டு பேரை நியமிச்சாங்க. அப்புறம் கே.பி.முனுசாமி வந்தாரு. போனாரு. அப்புறம் பழனிச்சாமி, பழனியப்பன்னு தலைமைதானே ஐவரணியை நியமிச்சது. இருக்கிற மொத்த துறைகளையும் 5 பேருக்கும் பிரித்துக் கொ டுத்து கலெக்ஷன்களை கவனித்து பார்ட்டிக்கு நிதி கொடுக்கணும்னு சொன்னதும் தலைமை தானே.. .
இதிலே ஒவ்வொரு துறை விவகாரங் களையும் கவனிக்க அதிகாரிகளும் நியமிக்கப் பட்டாங்க. எல்லாத்தையும் ஆலோசகரம்மா ஒருங்கிணைச்சாரு. இவங்களை மீறி நாங்க என்ன பண்ணிடமுடியும்? இப்ப எங்களை மட் டும் தண்டிக்கிறது நியாயமான்னு கேட்குறாங்க.
'' ""ஓ.. அநியாயத்திலும் இப்படியொரு நியாயம் இருக்குதோ?'' ""ஒவ்வொரு டெண்டரிலும் கிடைப்பதில் 60% கட்சிக்கு, 20% டெண்டர் விடப்படும் மாவட்டத்துக்கு, 20% டெண்டர் கலெக்ஷனை கவனிப்பவங்களுக்குன்னு பாகம் பிரிக்கச் சொன்னது யாருன்னு மந்திரிகள் தரப்பில் கேட்குறாங்க. இப்ப எங்களைச் சேர்ந்தவங் களை மட்டும் டார்கெட் பண்ணினா நியாயமான்னு கேட்குற மந்திரிகள் தரப்பு,
ஓ.பி.எஸ்ஸை ரெயின்ட்ரீ ஓட்டலில் போலீஸ் காவலில் உட்கார வைக்கிறதும், அவர் மனைவி உள்பட குடும்பத்தினர் போனைக்கூட டேப் செய்வதும், அவருக்கு காபி, டீ வாங்கித்தரும் உதவியாளரைக்கூட கட்சியைவிட்டு நீக்குறதும் சரியான்னு கேட்குறாங்க.
அதுபோல அதானி நிறுவனத்தோடு நத்தம் விசுவநாதன் போட்ட ஒப்பந்தமெல்லாம் கார்டனுக்கும் கோட்டைக் கும் தெரியாதான்னு கேட்குறாங்க.
கட்சிக்காரங்ககிட்டே புலம்பி என்ன ஆகப்போகுது? கார்டனிலே சொல்ல வேண்டி யதுதானே?
'' ""அங்கே கிடைக்கிற ட்ரீட்மெண்ட்டிலே சப்தநாடியும் ஒடுங்கிடுதே!

வைத்திலிங்கத்தை சென்னையில் வீட்டுச்சிறை வச்சிட்டு ஒரத்தநாடு வீட்டில் ரெய்டு பண்ணினாங்க.
இளவரசி ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியும் தப்பிக்கலை. பழனியப்பனோட சொந்த ஊரிலும் ரெய்டு. ஒட்டுமொத்த ஆட்சியும் சேர்ந்து எல்லாத்தையும் பண்ணிட்டு
எங்களை மட்டும் ஊழல்வாதிகளா காட்டி பலிகடா வாக்குவதான்னு வேதனையோடு முனகுது ஐவரணி தரப்பு.''
 nakkheeran,in

கருத்துகள் இல்லை: