திமுக கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பதற்கான முயற்சிகளில், திமுக
முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். திடீர் திருப்பமாக தேமுதிக-வுடன்
மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் மேலிடத்திலிருந்தும் திமுக-வுடன் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக கூட்டணியில் மமக, புதிய தமிழகம் கட்சிகளுக்கு தொகுதிகள்
ஒதுக்கப்பட்டுவிட்டன. விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக்
கட்சிகளோடு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்கிறது. இந்த நிலையில்,
திமுக கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கும் பொறுப்பு திமுக-வின் உயர்
மட்ட நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்ததும்
செவ்வாய்க்கிழமை காலையில் திமுக நிர்வாகிகளும், தேமுதிக நிர்வாகிகளும்
அதிகாரப்பூர்வமற்ற வகையில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு தேமுதிக தரப்பிலிருந்து திமுக-வுக்கு சாதகமான பதில்
கிடைத்ததாகக் கூறப்பட்டது. ஆனால், விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷ்
மற்றும் பிரேமலதா ஆகியோர் தேமுதிக தனித்து போட்டியிட விரும்புவதால், இறுதி
முடிவெடுக்க கால அவகாசம் தேவை என தேமுதிக தரப்பிலிருந்து புதன்கிழமை
தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையில், காங்கிரஸ் மேலிடத்திலிருந்து மீண்டும் திமுக-வின் முக்கிய
நிர்வாகிகளிடம் பேச்சு தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
திமுக தரப்பில் காங்கிரஸுக்குச் சாதகமான தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அதில்
5 தொகுதிகளைத் தருவதாக முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாம். கூட்டணிக்கு
அச்சாரமாகத்தான் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அதிமுக-வுக்கு
பதிலளிக்கும் அறிக்கையை வெளியிட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்
துள்ளன.
இதற்கிடையில் தேமுதிகவுடன் கூட்டணி சேரத் தயாராக இருக்கும் பெரும்பாலான
திமுகவின் தலைமை நிர்வாகிகள், காங்கிரஸ் கூட்டணியை எதிர்ப்பதாகவும்
சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளதால், கொஞ்சம்
பொறுமையாக, தமிழக அரசியல் மாறுதலுக்கு ஏற்ப முடிவெடுக்கலாம். அதுவரை
பேச்சுவார்த்தை தொடரட்டும் என்கிற மனநிலையில் திமுக இருப்பதாக அக்கட்சி
வட்டாரங்கள் தெரிவித் tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக