திங்கள், 3 மார்ச், 2014

நீலகிரியை கை கழுவுகிறார் ராஜா? : தினமலரின் சந்தேகம் ?

அன்னூர்:நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா, தொகுதி பக்கம் அதிகமாக வராததால், உடன்பிறப்புகள் உற்சாகமிழந்து காணப்படுகின்றனர். நீலகிரி எம்.பி., தொகுதியில், 2009 தேர்தலில் போட்டியிட்டு, 80 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ராஜா வெற்றி பெற்றார். தொலைதொடர்பு துறை அமைச்சராகவும் ஆனார். "2 ஜி' அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான புகாரால், 2010ல் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
கடந்த 2011, பிப்., 1ல் கைது செய்யப்பட்டு, டில்லி, திகார் சிறையில் அடைக்கப்பட்டு, 15 மாத சிறை வாசத்திற்கு பின், 2012, மே 15ல் ஜாமினில் வெளிவந்தார். கடந்த 2011, ஜனவரியில் நீலகிரி தொகுதிக்கு வந்தவர், 16 மாதங்களுக்கு பின், 2012, ஜூன் 10ல் தான், மீண்டும் தொகுதிக்கு வந்தார். சிறைக்கு செல்லும் முன், அமைச்சராக இருந்த போதும், இரு வாரங்களுக்கு ஒரு முறை, தொகுதியில் சுற்றுப்பயணம் செய்தார். உங்கள் செய்தியிலிருந்து ஆ. ராசா நீலகிரி தொகுதியில் போட்டியிடுவது உறுதி என தெரிந்துகொண்டோம்.
தினமலரின்
அன்னூரில் புதிய தாலுகா அறிவிப்பை, அப்போதைய முதல்வர் கருணாநிதி வெளியிட காரணமாக இருந்தார். அவிநாசி அத்திக் கடவு திட்ட ஆய்வுக்கு நிதி ஒதுக்கச் செய்தார். ஆனால், சிறைக்கு சென்று வந்து, 21 மாதங்களாகி விட்டது. இப்போது, மாதம் ஒரு முறை தொகுதிக்கு வருவதே அபூர்வமாகி விட்டது. தொகுதியில் பல்வேறு முக்கிய பிரச்னை இருந்த போதும், எப்போது கேட்டாலும், டில்லி, சென்னை அல்லது பெரம்பலூரில் உள்ளார் என்றே, உதவியாளர்களிடமிருந்து பதில் வருகிறது. முதல் இரண்டாண்டு சுறுசுறுப்பாக பணியாற்றி, அதன்பின் தொகுதி பக்கமே அதிகமாக வரவில்லை என, மக்களிடம் புகார் எழுந்துள்ளது. இதனால், உடன்பிறப்புகள் உற்சாகம் இழந்துள்ளனர். ராஜா, தன் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்யாமல் இருப்பது, மீண்டும் இத்தொகுதியில் போட்டியிடும் திட்டமில்லையோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது..dinamalar.com

கருத்துகள் இல்லை: