காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணிக்காக கதவை திமுக சாத்தியதற்கு காரணம்
கோபம்தான் என்கின்றனர். அதற்கு பல காரணங்களையும் முன்வைக்கின்றனர்
திமுகவினர். மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதுதான் திமுக பொருளாளர்
ஸ்டாலினுக்கு அதிக கோபமாம்.
ப.சிதம்பரம் மனப்பூர்வமாக நினைத்திருந்தால் எங்கள் மீதான புகார்களில்
இருந்து எங்களை விடுவித்திருக்கலாம். எங்களுக்கு உதவி செய்ய வேண்டியவர்,
உதவி செய்ய வேண்டிய இடத்தில் இருந்தவர் உதவவில்லை' என்று
ப.சிதம்பரத்தைத்தான் குற்றம்சாட்டுகிறாராம் ஸ்டாலின்
ஆனால், ப.சிதம்பரமும் விடாமல் பல்வேறு தூதுவர்களை தி.மு.க-வை நோக்கி
திருப்பிவிட்டு வருகிறார். மார்ச் 1-ம் தேதி ஸ்டாலின் பிறந்தநாள். இதுவரை
அவருக்கு ப.சிதம்பரம் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னது இல்லை. முதல் தடவையாக
இந்தப் பிறந்தநாளுக்கு போனைப் போட்டு வாழ்த்துச் சொல்லி இருக்கிறார் ப.சி.
ஒருபுறம் சமாதானமாக கூட்டணிக்கு தூது வந்தாலும் மறுபுறம், மிரட்டல்
விட்டு கூட்டணிக்கு இணைக்கும் முயற்சி நடைபெற்றது திமுக தலைமைக்கு
தெரியவந்துள்ளது. ஸ்டாலின் மகன் உதயநிதி, வெளி நாட்டிலிருந்து இறக்குமதி
செய்த ஹம்மர் கார் சம்பந்தமான கேஸை காங்கிரஸ் அரசு வேகப்படுத்துற
நடவடிக்கையில் இறங்கியதும் கூட்டணிக்காக விடுக்கப்பட்ட மிரட்டல்
என்கின்றனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவதாக
தி.மு.க அறிவித்த மறுநாளே, மு.க.ஸ்டாலின் வீட்டில் இந்த கார் விவகாரம்
தொடர்பாகத்தான் சி.பி.ஐ. ரெய்டு நடந்தது. சமீபத்தில் திருச்சி மாநாட்டிலும்
காங்கிரஸ் கூட்டணி இல்லைன்னு முடிவானதும், கார் விவகாரத்தை சி.பி.ஐ மூலமாக
தீவிரமாக்கியுள்ளது காங்கிரஸ்.
வெளிநாட்டிலிருந்து கார் இறக்குமதி செய்து கொடுத்தவர் பெயர் அலெக்ஸ்.
தலைமறைவா இருந்த அவரை டெல்லியில் கைது செய்த சி.பி.ஐ, சென்னை சாஸ்திரி
பவனில் உள்ள தங்களது அலுவலகத்துக்குக் கொண்டு வந்து, விசாரித்தனர்.
மு.க.ஸ்டாலின்தான் தன் மகனுக்காக வெளிநாட்டுக் கார் வாங்கித் தரச்சொன்னார்
என்றும் அதை விலை குறைத்துக் கணக்குக் காட்டச் சொன்னார் என்றும்
வாக்குமூலம் கொடுக்கச் சொல்லி அலெக்ஸை டார்ச்சர் செய்துள்ளனர் சிபிஐ
அதிகாரிகள் என்கின்றனர்.
சி.பி.ஐ கேட்டபடி அலெக்ஸ் ஸ்டேட்மெண்ட் தரவில்லை. இதனால் ரிமாண்ட்
செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அலெக்ஸ் அடைக்கப்பட்டுள்ளார். சி.பி.ஐ. இந்த
அளவுக்கு தீவிரமாக செயல்பட்டதன் பின்னணியில் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி
இருப்பதாகவும் திமுக கருதுகிறது.
இது ஒருபுறம் என்றால், கடந்த சனிக்கிழமையன்று கருணாநிதியின் அக்காள்
மகனும் கலைஞர் டி.வி. எம்.டியுமான அமிர்தத்துக்கு அமலாக்கப் பிரிவிலிருந்து
ஒரு விசாரணைக்கான நோட்டீஸ் வந்திருக்கிறது. அதுபோல, கலைஞர் டி.வியின்
முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்துக்கும் நோட்டீஸ் வந்துள்ளதாம்.
மிரட்டியே கூட்டணி அமைக்க காங்கிரஸ் நினைப்பதால் அவர்களுடன் கூட்டணியே இல்லை என்ற முடிவுக்கு கருணாநிதி வந்துவிட்டார் என்கிறா tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக