சனி, 8 மார்ச், 2014

ஜெ.யின் கூட்டணியில் மமதா, நவீன், நிதிஷ்,ஜெகன்: இடதுசாரிகள் வெளியேறிய பின்னணி காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு மாற்றாக பெடரல் முன்னணி


  சென்னை: லோக்சபா தேர்தலில் மூன்றாவது அணி ஆரம்பித்த வேகத்திலேயே காணாமல் போய்விட்ட நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, புதியதாக பெடரல் கூட்டணி ஒன்றிர்க்கு அச்சாரம் போடுவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாகவே இடதுசாரிகள் கழற்றி விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறிய திரிணாமுல் காங்கிரசின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ‘பெடரல் முன்னணி' என்ற பெயரில் தேசிய அளவில் 3வது அணி அமைக்க முயற்சி செய்தார்.  காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு மாற்றாக பெடரல் முன்னணி அமைப்பது தொடர்பாக மமதா பேஸ்புக் மூலம் தகவலும் வெளியிட்டார். இந்த கூட்டணியில் இணைவது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரிடமும் அவர் கடந்த ஆண்டே பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த பேச்சு அத்துடன் நின்றுவிட்டது. தற்போது அதே பெடரல் கூட்டணி கோஷத்தை முன்வைத்து நிதிஷ் குமார், நவீன்பட்நாயக், ஜெகன், மமதா ஆகியோரை ஜெயலலிதா இணைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இணைந்திருந்த இடதுசாரிகள் கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 3 தொகுதிகள் கிடைத்தன. தொடர்ந்து 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை தொடர்ந்து கணிசமான இடங்களில் வெற்றி பெற்றன. மூன்று கேட்ட சி.பி.எம் இந்த லோக்சபா தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கம்யூனிஸ்ட்கள் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. இதற்கு காரணம் மூன்று தொகுதிகள் கேட்டு 1 தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டதுதான் என்று கூறப்படுகிறது. திட்டமிட்டு கழற்றிவிட்ட அதிமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட்களை கழற்றிவிட்டதன் பின்னணி என்ன என்று விசாரிக்கும் போது பல்வேறு தகவல்கள் தெரியவருகின்றன. கம்யூனிஸ்ட்கள் அல்லாத புதிய அணியை ஜெ.அமைக்க விரும்புவதே காரணம் என்றும் கூறப்படுகிறது. கம்யூனிஸ்ட்கள் வேண்டாம் கம்யூனிஸ்ட்கள் ஏற்படுத்தி வரும் மூன்றாவது அணியை ஏற்றுக் கொள்ள மமதா, நிதிஷ்குமார் ஆகியோர் விரும்ப வில்லையாம். மாறாக கம்யூனிஸ்ட்கள் அல்லாத கூட்டணியை ஏற்படுத்த வேண்டும் என்றே அவர்கள் விரும்பியுள்ளனர். மேற்கு வங்கத்தில் எதிரி மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்களுக்கு இம்முறை அதிக இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தெரியவரவே, அவர்களை கழற்றிவிட்டு விட்டு கம்யூனிஸ்ட்களின் பரம எதிரியான மமதாவை நெருங்கத் தொடங்கினார் ஜெ. பெடரல் கூட்டணி கம்யூனிஸ்ட்கள் அல்லாத புதிய கூட்டணியை அமைக்க விரும்பிய ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மமதா, பீகார் முதல்வர் நிதிஷ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை இணைத்து பெடரல் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். ஜெ. பிரதமராக ஆதரவு ஜெயலலிதா தொடர்ந்து பேசி வருவதன் விளைவாகவே, நேற்று தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மம்தா, ஜெயலலிதா பிரதமராக விரும்பினால் அதற்கு தான் முழு ஆதரவு தர தயாராக இருப்பதாக கூறினார். தேர்தலுக்குப் பின்னர் அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் இணைந்து செயலாற்ற நாங்கள் தயராக இருக்கிறோம் என்றும் மம்தா கூறினார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: