வெள்ளி, 7 மார்ச், 2014

கூட்டணி வியாபாரத்தில் சாதனை படைக்கும் தேமுதிக ? Latest ஆக பாஜகவுடன் கூட்டணி ! ???

கூட்டணி தொடர்பான மெகா சீரியலில், முக்கிய திருப்பமாக, 'பா.ஜ.,வுடன் கூட்டணி பேச்சு துவங்கியுள்ளது' என, தே.மு.தி.க., சார்பில், நேற்று தான் முதன்முதலாக, அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.இதை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ள, தமிழக பா.ஜ., தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன், இன்னும் இரண்டு நாளில், பா.ஜ., - தே.மு.தி.க., கூட்டணி முடிவாகி விடும் என்றும், பா.ஜ., தேசிய தலைவர், ராஜ்நாத் சிங் சென்னையில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.இதற்கிடையில், நிர்வாகக் குழுவை கூட்டி விவாதித்த, பா.ம.க., தலைவர், ராமதாஸ், பா.ஜ., கூட்டணியில் சேரும் முடிவை வெளியிட்டுள்ளார். தொகுதிகளின் எண்ணிக்கை, தே.மு.தி.க., வருகைக்கு பின் தெரியவரும் எனவும் கூறியுள்ளார்.இதனால், தி.மு.க.,வுடன் நேற்று காலையில், தே.மு.தி.க.,வினர் நடத்திய பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகி உள்ளது.
Sridhar - Nagercoil,இந்தியா பொட்டி கிடைச்சா, பி.ஜே.பி என்ன, கூவம் அதிமுகவுடன் கூட கூட்டணி வைக்க துடிக்கும் இவனெல்லாம் ஒரு அரசியல்வாதி.. தூ.. அரசியல் வியாதி. ஜெயாவின் பிளான் படி, எதிர்கட்சிகள் ஒன்று சேரவிடாமல் செய்து, அதன் மூலம் ஜெயித்து விடலாம் என்று பகல் கனவு காண்கிறார். எப்படி, வைகோவை, அடிமை தா.பாண்டியனை, சிபிஎம்மை, கேவல படுத்தி வெளியேற்றியது போல, தண்ணீரில் மிதக்கும் கப்பல் கேப்டனின் தேமுதிகவையும் ஒழிக்க நினைக்கும் சர்வாதிகாரிக்கு பாடம் புகட்டவும், மக்கள் விரோத செயல்களின் மொத்த உருவமான ஜெயாவுக்கு ஆப்பு அடிக்க வாய்த்த சந்தர்பத்தை பயன்படுத்த தெரியாதவன் அரசியலுக்கு கொஞ்சமும் லாயக்கற்றவன். வெறும் வாய்பேச்சில் உதார் விடும் நீயெல்லாம் ஒரு சராசரி மனிதன் கூட இல்லை...தரம் தாழ்ந்தவன். கூலிக்கு மாரடிக்கும் குடிகாரன். உன்னை நம்பியும் உன் பின்னால் ஒரு கூட்டம் எனபது, கூவத்தில் கலக்கும் சாக்கடைகள் தான். உனக்கு இனி அழிவு தான் முடிவு.


குழப்பம்:
தமிழகத்தில், தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., அடங்கிய, பெரிய கூட்டணியை அமைக்க, பா.ஜ., ஆரம்பம் முதல் முயற்சி எடுத்து வருகிறது. அதற்கான பேச்சுவார்த்தை, தே.மு.தி.க., விஷயத்தில் மட்டும் இழுபறி நிலைக்கு வந்தது.தொடர்ந்து பேசிய பின்னும், உடன்பாட்டுக்கு தே.மு.தி.க., வரவில்லை. காங்கிரஸ், தி.மு.க., என, மறு பக்கத்திலும், அக்கட்சி திரைமறைவு பேச்சு நடத்தியது தான் குழப்பத்துக்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து, கூட்டணி பேச்சை முடித்து, உடன்பாட்டை வெளியிடப் போவதாக, பா.ஜ., எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும், தே.மு.தி.க., அசரவில்லை. நேற்று காலை வரை, யாருடன் கூட்டணி என்பதில் குழப்ப நிலையை நீடிக்க வைத்தது.நேற்று காலையில், தி.மு.க., நிர்வாகிகளுடன், தே.மு.தி.க., நிர்வாகிகள் பேச்சு நடத்தியதில், 10 தொகுதிகள் என பேசப்பட்டு உள்ளது. அதை தே.மு.தி.க.,வும் ஏற்றுக்கொள்ளும் என, தி.மு.க., நம்பிக்கையோடு இருந்தது. மாவட்ட செயலர்களை எல்லாம் சென்னைக்கு அழைத்து, வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடவும் அக்கட்சி ஆயத்தமானது.

வலியுறுத்தல்
இந்நிலையில், டில்லியில்முகாமிட்டுள்ள, தமிழக பா.ஜ., தலைவர்கள், பொன்.ராதா கிருஷ்ணன், இல.கணேசன், மோகன்ராஜுலு ஆகியோர், அவர்களது தேசிய தலைவர், ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினர்.அப்போது, 'தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசி வருவதாக, பா.ஜ., தரப்பில் இருந்து தான், தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால், தே.மு.தி.க., தரப்பில் இருந்து இதுவரை, அதை ஆமோதித்து ஒரு அறிக்கை கூட வெளியிடப்படவில்லை. இதனால், கூட்டணி குறித்த குழப்பம், பா.ஜ.,வினர் மத்தியிலும் எழுந்துள்ளது. இதை தீர்த்து வைக்க வேண்டுமானால், பா.ஜ.,வுடன் கூட்டணி பேச்சு நடப்பதாக, தே.மு.தி.க., முதலில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட வேண்டும்' என, வலியுறுத்தினர்.இந்த யோசனை குறித்து, நேற்று மாலையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை ஏற்று, அவசர அவசரமாக, 'லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, பா.ஜ.,வுடன் பேச்சு துவங்கியுள்ளது'
என, தே.மு.தி.க., சார்பில், அதிகாரபூர்வமாக அறிவிப்பு, அவர்களது கட்சி, 'டிவி'யில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
'தே.மு.தி.க.,வின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. கூட்டணி பேச்சு நல்ல விதமாக நடந்து வருகிறது. கூட்டணி அறிவிப்பை, பா.ஜ., தேசிய தலைவர் அறிவிப்பார். அதற்காக அவரை, சென்னை வரும்படி அழைத்துள்ளோம். இன்னும் இரண்டு நாளில் அவர் சென்னை வருவார்' என்றார்.>இதற்கிடையில், திண்டிவனம் அருகே உள்ள, தைலாபுரத்தில், பா.ம.க.,வின் நிர்வாகக் குழு கூடியது. அதில் பேசிய, அக்கட்சியினர் நிறுவனர் ராமதாஸ், 'பா.ஜ.,வுடன் கூட்டணி பேசி முடிவாகி விட்டது. தே.மு.தி.க., கூட்டணியில் இருந்தால், ஏழு முதல் எட்டு சீட் கிடைக்கும். தே.மு.தி.க., வரவில்லை என்றால், 10க்கும் மேற்பட்ட தொகுதிகள் பெற முடியும். ஆனால், கூட்டணி முடிவை, இப்போதைக்கு அறிவிக்க வேண்டாம். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி இல்லை என, உறுதியானதும், கூட்டணி குறித்து நாம் முறையாக அறிவிக்கலாம்' என, கூறியுள்ளதாக, பா.ம.க., வட்டாரம் தெரிவித்தது.
- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.com 

கருத்துகள் இல்லை: