ஞாயிறு, 2 மார்ச், 2014

சவுக்கு இணையதளத்துக்கு தடை விதித்த நீதிபதி பெயரிலேயே சவுக்கு மிரர் இணையதளம்!


நீதிபதி செல்வம்
நீதிபதி செல்வம்அரசியல்வாதிகளின் ஊழலை மட்டுமின்றி காவல்துறை, நீதித்துறை மற்றும் பத்திரிக்கை துறைகளில் நடக்கும் ஊழல்களை வெளியிட்டுவரும் சவுக்கு தளத்தை தடைவிதித்த நீதிபதி சிடி செல்வம் பெயரிலேயே, சவுக்கு மிரர் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இணையதள வடிவமைப்பாளர் முருகைய்யன் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், நீதிபதி சி.டி.செல்வம் குறித்தே, சவுக்கு தளத்தில் பல்வேறு கட்டுரைகள் வந்திருப்பதால், சி.டி.செல்வம் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று, தலைமை நீதிபதியிடம் புகார் மனு அளிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த மனு நிலுவையில் இருக்கையில் சி,டி.செல்வம் இந்த வழக்கை விசாரிப்பது முறையல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது.
“நான் அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மாட்டேன். தற்போது தீர்ப்பு தரப்போகிறேன்” என்று தெரிவித்த நீதிபதி சி.டி.செல்வம், சவுக்கு இணையதளத்தை, சென்னை மாநகர காவல்துறை பத்து நாட்களுக்குள், முடக்கியே தீர வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லப்போவதாக சவுக்கு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சவுக்கு இணையதளம் முடக்கப்பட்டால் இது போன்று நூற்றுக்கணக்கான பெயர்களில் இணையதளங்கள் வெளியாகும் என்று சவுக்கு தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சவுக்குக்கு தடைவிதித்த நீதிபதி சிடி செல்வம் பெயரிலேயே www.ctselvam.com, மற்றும் www.ctselvam.net டொமேன்களில் சவுக்கு மிரர் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
சவுக்கு தளம் முடக்கப்படும் செய்தி தற்போது தேசிய ஊடகங்களிலும் வெளிவர ஆரம்பித்துள்ளது, இந்நிலையில் சவுக்கு தளத்தை முடக்குகிறோம் என்று தமிழக அளவில் பிரபலமான சவுக்கை இந்திய அளவில் பிரபலமாக்கியுள்ளார்கள்.
viruvirupu.com

கருத்துகள் இல்லை: