உ.பி.யில் சாதி அரசியலும், மதவாத அரசியலும் ஓங்கி நிற்பதாகவும் அதனை மாற்றி
மாநிலத்தில் வளர்ச்சிக்கு வித்திடும் அரசியலை ஏற்படுத்துவதே ஆம் ஆத்மியின்
நோக்கம் என கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
உ.பி. மாநில ஆம் ஆத்மி பொறுப்பாளர் சஞ்சய் சிங் பேசுகையில்: ஊழல், வாரிசு
அரசியல், அரசியலில் கிரிமினல்கள் தலையீடு ஆகியனவற்றை ஒழிப்பது குறித்தும்,
மின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்தும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்
என்றார்.
உத்திரப் பிரதேச மாநிலத்தில், 3 நாட்கள் பிரச்சார பயணத்தை துவக்கினார் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால். இந்த ஆசாமி இட ஒதுக்கீட்டுக்கு ஆப்பு வைக்க பார்க்கிறார்? ஊழல் ஊழல்ன்னு சொல்லி இட ஒதுக்கீட்டை அமுக்க முயற்சிக்கிறாரா ?
அவருடன் ஆம் ஆத்மி கட்சி முக்கியப் பிரமுகர்கள் மனீஷ் சிசோதியா, சஞ்சய் சிங் ஆகியோரும் பிரச்சார பயணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
உ.பி. மாநிலம் முழுவதும் பிரதான சாலைகளில், சாலையோர பிரச்சாரம் மேற்கொள் அரவிந்த் கேஜ்ரிவால் திட்டமிட்டிருக்கிறார்.
முதலில், காசியாபாத்தில் பிரச்சாரத்தை தொடங்கும் அவர் நாளை (ஞாயிற்றுக்
கிழமை) கான்பூரிலும், மார்ச் 3-ஆம் தேதி அவுரியா, மதுரா, புல்வால் ஆகிய
பகுதிகளிலும் பிரச்சாரம் செய்கிறார்.
மேலும் மார்ச் 8-ஆம் தேதி, குஜராத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில், காங்கிரஸ், பாஜ கட்சிகளுக்கு மாற்றாக கால் பதிக்க ஆம் ஆத்மி கடும் முயற்சி செய்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.
மக்களவைத் தேர்தலை குறிவைத்து கேஜ்ரிவால் இது போன்ற பிரச்சாரங்களை செய்து
வருகிறார். முன்னதாக ஹரியானா மாநிலத்தில் கேஜ்ரிவால் பிரச்சாரம் செய்தார். tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக