புதன், 5 மார்ச், 2014

காலையில் பாஜக.. மாலையில் திமுக. ! மீண்டும் விஜயகாந்த் வேதாளம் திமுகவில ? தாங்க முடியல்ல சாமியோவ்


சென்னை: பாஜக அணியில் விஜயகாந்தின் தேமுதிக இடம்பிடித்துவிட்டது.. 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டது என்றெல்லாம் காலையில்தான் செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின. ஆனால் மாலையில் திமுக அணிக்கு போவது என தேமுதிக முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என்பது கடைசி வரை புரியாத புதிர்தான். காங்கிரஸ், திமுக, பாஜக என பல கட்சிகளும் விஜயகாந்துக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தன.அழைப்புவிடுத்த அத்தனை கட்சிகளுடனும் பேசி வந்தார் விஜயகாந்த். இந்த நிலையில் திடீரென அவர் சிங்கப்பூர் பறந்துவிட்டார். பின்னர் சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், பாஜகவுடன் கூட்டணிப் பேச்சில் ஈடுபட்டார். இந்த அணியில் ஏற்கெனவே மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது பாஜக. பாமகவோ 10 தொகுதிகளை விட்டுக் கொடுக்க முடியாது என பிடிவாதம் காட்டி வருகிறது. பாஜகவோ 8 தொகுதிதான் தருவோம் என்றது. இந்நிலையில் தேமுதிக 16 தொகுதிகள் கேட்டதாகவும் பாஜக 14 தொகுதிகளைக் கொடுக்க முன்வந்ததாகவும் கூறப்பட்டது. அத்துடன் கூட்டணிக்கான பேரம் முடிந்துவிட்டது என்றும் காலையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. ஆனால் மாலையில் தேமுதிக, திமுக அணிப் பக்கம் போக முடிவெடுத்துவிட்டதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனாலேயே திமுக அணியில் நேற்று தொடங்கிய தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதாம். பாரதிய ஜனதா கட்சி எத்தனை தொகுதிகளை ஒதுக்கினாலும் வெல்வது கடினம்.. ஆனால் திமுக அணியில் கணிசமான இடங்களில் வெல்ல முடியும் என்ற இறுதி முடிவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வந்ததாகவும் இது குறித்து திமுக தலைமைக்கும் தெரிவிக்கப்பட்டதாகவும் அதனாலேயே தொகுதிப் பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது என்றும் கூறப்படுகிறது. தேமுதிக, திமுக அணிக்கு வரும் போது அதிமுக அணியைவிட்டு வெளியேறும் இடதுசாரிகளில் மார்க்சிஸ்ட் கட்சியும் இடம்பெறக் கூடும் என்றும் அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. உஷ்.. கண்ண கட்டு tamil.oneindia.in 

கருத்துகள் இல்லை: