அ.தி.மு.க.,வால் கழற்றி விடப்பட்ட, கம்யூனிஸ்ட் கட்சிகள்,
தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க தயாராகி விட்டன. சென்னையில், நேற்று நடந்த,
இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில், இதற்கான முடிவு
எடுக்கப்பட்டதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.கம்யூனிஸ்ட்
கட்சிகளுக்கு, அ.தி.மு.க., 'கல்தா' கொடுத்ததை அடுத்து, அடுத்த கட்ட
நடவடிக்கை குறித்து, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்,
பரஸ்பரம் ஆலோசித்தனர். தங்கள் முடிவை, கட்சியின் மாநில நிர்வாகக் குழு
கூட்டத்துக்குப் பின், தெரிவிப்பதாகக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட், நேற்று
நிர்வாகக் குழுக் கூட்டத்தை கூட்டியது.
கட்சியின் மாநில செயலர், தா.பாண்டியன், துணை செயலர், மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள், கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில், பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், 'நண்பர்களாக சேர்ந்தோம், நண்பர்களாக பிரிவோம் என, மார்க்சிஸ்ட் கட்சியிடம், அ.தி.மு.க., கூறியுள்ளது. நம்மிடம் எதையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. எனவே, அ.தி.மு.க., கூட்டணியில், தொகுதிகளைப் பெற காத்திருப்போம்' என்ற கருத்தை தெரிவித்தார். இதற்கு, பல நிர்வாகிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இடதுசாரி கூட்டணி என்பது, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக் கட்சிகள் அடங்கியது. இதில், யார் ஒருவருக்கு, 'சீட்' இல்லை என்றாலும், இடதுசாரிகள் அக்கூட்டணியில் நீடிக்க முடியாது. எனவே, 'அ.தி.மு.க., கூட்டணியில் நீடிக்க முடியாது' என்றனர்.
அந்த நிர்வாகிகள் மேலும் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்கியுள்ள ஜெயலலிதா, காங்கிரஸ் மற்றும் தி.மு.க.,வை தாக்கி பேசுகிறார். பா.ஜ.,வை பற்றி பேசவில்லை. எனவே, காங்கிரஸ், பா.ஜ., அல்லாத அணி என்ற கொள்கைக்கு எதிராக ஜெ., செயல்படுகிறார். தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ, அவர், பா.ஜ.,வுடன் அணிசேர வாய்ப்புள்ளது. அதனால், அ.தி.மு.க., அணியில் தொடர முடியாது. பதில் இல்லை:
செந்தமிழ் கார்த்திக் - Namakkal to chennai,இந்தியா
07கம்யூனிஸ்ட் கட்சியினரின் வாக்கு வங்கி பற்றி அனைவருக்கும் நன்கு
தெரியும்.. சிறிது வெற்றிக்கு உதவுவார்கள் அவ்வளவே.. மற்றபடி பெரியஅளவில்
ஒன்றும் கிடையாது. ஏற்கனவே ராஜ்யசபா சீட் 2 கட்சிக்கும் தலா ஓன்று
கொடுத்தாகி விட்டது, மற்றும் இருவருக்கும் சேர்த்து 4 தொகுதிகள் என்று
அதிமுக தலைமை தரலாம் என்று நினைத்தது. ஆனால் இருவருக்கும் தலா 4 தொகுதிகள்
வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் அடம் பிடித்தால் எப்படி ? சட்டியில்
இருந்தால் தானே அகப்பையில் வரும் ??? பிறகு அதிமுக கூட்டணி வேண்டாம் என்று
அவர்களே தான் முடிவு செய்து விலகி உள்ளனர். அதற்காக ஜெயலலிதாவை இங்கு பலர்
விமர்சிப்பது வடிகட்டிய முட்டாள்தனம்.. ஜெயலலிதாவை வாயாரா புகழ்ந்தால் ,
சீட்டுகளை வாரி வழங்குவார் என்று நினைத்தால் என்ன செய்ய முடியும்.? ஜெயா
அதற்கு எல்லாம் மசிபவர் கிடையாது. தில்லுக்கு பெயர் போன அதிரடியான ஆள்..
தன்னுடைய எடை என்ன என்று அவருக்கு தெரியும். என்ன தான் சொம்பு அடித்தாலும்,
அப்போதைக்கு சிரிப்பார், ரசிப்பார்.. ஆனால் காரியத்தில் கண்ணாகவே
இருப்பார். இப்போது கருணா வலை விரிக்கிறார். ஏற்கனவே அங்கு துக்கட கட்சிகள்
அதிகம். அவர் மட்டும் என்ன 4+4 என்று கொடுத்து விடவா போகிறார்.. ??? இங்கே
நடந்தது தான் அங்கேயும் நடக்கும். கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒட்டுண்ணி என்று
முடிவாகி விட்டது பிறகு யாருடன் ஓட்டினால் என்ன ??? ஒழியட்டும் விடுங்கள்.கட்சியின் மாநில செயலர், தா.பாண்டியன், துணை செயலர், மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள், கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில், பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், 'நண்பர்களாக சேர்ந்தோம், நண்பர்களாக பிரிவோம் என, மார்க்சிஸ்ட் கட்சியிடம், அ.தி.மு.க., கூறியுள்ளது. நம்மிடம் எதையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. எனவே, அ.தி.மு.க., கூட்டணியில், தொகுதிகளைப் பெற காத்திருப்போம்' என்ற கருத்தை தெரிவித்தார். இதற்கு, பல நிர்வாகிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இடதுசாரி கூட்டணி என்பது, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக் கட்சிகள் அடங்கியது. இதில், யார் ஒருவருக்கு, 'சீட்' இல்லை என்றாலும், இடதுசாரிகள் அக்கூட்டணியில் நீடிக்க முடியாது. எனவே, 'அ.தி.மு.க., கூட்டணியில் நீடிக்க முடியாது' என்றனர்.
அந்த நிர்வாகிகள் மேலும் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்கியுள்ள ஜெயலலிதா, காங்கிரஸ் மற்றும் தி.மு.க.,வை தாக்கி பேசுகிறார். பா.ஜ.,வை பற்றி பேசவில்லை. எனவே, காங்கிரஸ், பா.ஜ., அல்லாத அணி என்ற கொள்கைக்கு எதிராக ஜெ., செயல்படுகிறார். தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ, அவர், பா.ஜ.,வுடன் அணிசேர வாய்ப்புள்ளது. அதனால், அ.தி.மு.க., அணியில் தொடர முடியாது. பதில் இல்லை:
பா.ஜ.,வை, ஜெயலலிதா விமர்சிக்கவில்லை என்ற கருத்தை, அவரின் கவனத்திற்கே, தா.பாண்டியன் எடுத்தும் சென்றிருக்கிறார். ஆனால், அதற்கு, ஜெ., எந்த பதிலும் அளிக்கவில்லை. தேர்தல் என்றால் வெற்றி பெறத்தான், அனைத்துக் கட்சிகளும் போட்டியிடுகின்றன; கூட்டணியும் அமைக்கின்றன. அ.தி.மு.க., கூட்டணி இல்லை எனில், அடுத்த கூட்டணியை தேர்வு செய்ய வேண்டும். தனித்து நின்றால் வெற்றி பெற முடியாது. 40 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடுவது தேவையற்றது. பா.ஜ., பக்கம் அ.தி.மு.க., சாயும் நிலையில், அ.தி.மு.க.,வையும் சேர்த்து தோற்கடிக்க வேண்டும். இல்லையேல், பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிப்பது போலாகிவிடும். இவ்வாறு, நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இதையெல்லாம் கேட்ட, கட்சியின் மூத்த நிர்வாகிகள், அடுத்து என்ன செய்யலாம் என, யோசனை சொல்லுங்கள் என்று கூறியுள்ளனர். இதற்கு பதில் அளித்த பெருவாரியான நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க.,வுடன் கூட்டணி சேரலாம். காங்கிரஸ், பா.ஜ.,வை சரி சம தூரத்தில், தி.மு.க., வைத்துள்ளது. தேர்தல் பிரசாரத்தை, மதசார்ப்பற்ற அணி வெற்றிக்காக செய்ய வேண்டும் என, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.நிர்வாகிகளின் கோரிக்கையை, மாநில நிர்வாகக் குழு ஏற்றுக் கொண்டதாகவும், இக்கோரிக்கையை, கட்சியின் அகில இந்திய தலைமைக்கு தெரிவித்து அனுமதி பெறலாம் என, முடிவு செய்துள்ளதாகவும், இந்திய கம்யூனிஸ்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தோற்கடிக்க...:
'2ஜி' வழக்கு நடைபெற்று வருகிறது. அதில், இன்னும் தீர்ப்பு வரவில்லை. ஜெயலலிதா மீதும் சொத்து குவிப்பு வழக்கு நடக்கிறது. எனவே, இப்போதைக்கு, தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்வதே சரியாக இருக்கும். பா.ஜ., - அ.தி.மு.க., கட்சிகளை தோற்கடிக்கவும், இக்கூட்டணி உதவும். இவ்வாறு, அவர்கள் கூறினர். இம்முடிவை, மார்க்சிஸ்ட் மற்றும் பார்வர்ட் பிளாக் கட்சிகள் ஆதரிக்கும் என, எதிர்பார்க்கிறோம். விரைவில், தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு துவங்கும் என்றும், அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இணைந்து முடிவு செய்வோம்...:
''அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறிய நாங்கள், தேர்தலை சந்திக்க, இணைந்து முடிவெடுப்போம்,'' என, இந்திய கம்யூனிஸ்ட் செயலர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் இணைந்து தொகுதி உடன்பாடு கண்டு, போட்டியிட முடிவு செய்தோம். இதற்காக, பல கட்ட பேச்சுக்களை அக்கட்சியுடன் நடத்தினோம். ஆனால், அ.தி.மு.க.,வின் அணுகுமுறையால், உடன்பாடு ஏற்படவில்லை. 40 தொகுதிகளிலும், வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பிரசாரத்தை, அ.தி.மு.க., துவங்கி விட்டது. எனவே, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஒருங்கிணைந்து, லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம். எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பதை, விரைவில் முடிவு செய்வோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக