குஜராத்தில் மோடி அரசு ஏற்படுத்தியுள்ள வளர்ச்சியை ஆராய்வதற்காக ஆம் ஆத்மி
தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 4 நாள் சுற்றுப்பயணமாக குஜராத்தில்
முகாமிட்டுள்ளார்.
நேற்று காலை அகமதாபாத் விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், ‘குஜராத்தில்
ராம ராஜ்ஜியம் நடப்பதாக ஊடகங்களும், மாநில அரசும் தொடர்ந்து கூறி
வருகின்றன. கல்வித் துறை மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், சுகாதார பிரச்சனைகள்
தீர்க்கப்பட்டுள்ளதாகவும், ஊழல் அறவே ஒழிக்கப்பட்டு விட்டதாகவும்
கூறப்படும் குஜராத்தின் வளர்ச்சியை பற்றி அறிந்து கொள்வதற்காகவே இங்கு
வந்துள்ளேன்’ என்று கூறினார்.
பின்னர், நேற்றிரவு பேட்டியளித்த கெஜ்ரிவால், ‘என்னை தடுத்து நிறுத்தும்
விதமாக நரேந்திர மோடியும் அவரது ஆதரவாளர்களும் திட்டமிட்டு செயல்பட்டனர்.
எனது கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. என்னை போலீஸ் நிலையத்துக்கு
அழைத்து சென்றனர். ஏனுங்க மோடி குஜராத் வளர்ச்சி பத்தி எவ்வளவு விளம்பரம் பண்ணி வச்சிருக்காக அதையெல்லாம் போயி ஒத்தை விசிட்டில காலி பண்ணினா கோபம் வராதுங்களா ? வெபரம் புரியாம நீங்க ? எதுக்கும் சாக்கிரதையா இருங்க சாமி
என்னை தடுத்து நிறுத்தும்படி அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்டுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். மேலிட உத்தரவின்படியே நான் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டேன்.
எனது வருகைக்கு எதிராக போராட்டம் நடத்தும்படி, கருப்புக் கொடியுடன் சிலரை மோடி அனுப்பி வைத்துள்ளார். இவர்கள் இப்படி செய்வார்கள் என்பது எதிர்பார்த்ததுதான். நான் பார்த்த வரையில் மோடி கூறுவது போல் குஜராத் அணு அளவு கூட வளரவே இல்லை’ என்று தெரிவித்தார். maalaimalar.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக