குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த்
கெஜ்ரிவால், கட்ச் பகுதி முந்ரா தாலுகாவில் அமைந்துள்ள அதானி துறைமுகம்
மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தை ஆய்வு செய்து அங்குள்ள விவசாயிகளிடம்
கலந்துரையாடினார். அவர்கள் தங்கள் விவசாய நிலங்களை குஜராத் அரசு
கையகப்படுத்தியதாக புகார் தெரிவித்தனர். அவர்களிடம் பேசிய கெஜ்ரிவால்,
‘‘அதானி மற்றும் அம்பானிகளுக்குத்தான் மோடி வளர்ச்சி நாயகன். மிகப் பெரிய
தொழில் நிறுவனங்கள் அரசுடன் கூட்டு சேர்ந்து நிலங்களை கையகப்படுத்துகின்றன.
குஜராத்தில் உள்ள நிலங்கள் எல்லாம் விற்கப்படுவதுபோல் உள்ளது.
தொழில் அதிபர்கள் ஏராளமான அளவில் கருப்பு பணத்தை சம்பாதித்து ஒருநாள் சுவிட்சர்லாந்து சென்று விடுவார்கள். குஜராத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதாக ஊடகங்கள் மூலம் மோடி பிரசாரம் செய்கிறார். ஆனால், இங்குள்ள மக்கள் தங்கள் வேதனைகளை கொட்டித் தீர்க்கின்றனர். அப்தசா பகுதியில் உள்ள சீக்கிய விவசாயிகளின் நிலங்களை எல்லாம் குஜராத் அரசு கடந்த 2010ம் ஆண்டு முடக்கியது. அவர்கள் தற்போது தங்களது நிலங்களை இழந்து வாடுகின்றனர்’’ என்றார். dinakaran.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக