சனி, 9 நவம்பர், 2013

ஆ.ராசா: என் தரப்பு வாதங்களை சேர்த்துக் கொண்டால் மட்டுமே அறிக்கையை ஏற்கவேண்டும்

நவ. 7-2ஜி ஸ்பெக்ட்ரம் விவகா ரம் தொடர்பாக விசா ரணை நடத்திய பி.சி.
சாக்கோ தலைமையி லான நாடாளுமன்ற கூட்டுக்குழு(ஜேபிசி), சமீபத்தில் தனது விசா ரணை அறிக்கையை மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் ஒப் படைத்தது. வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அனுப்பிய கடிதங்களும் இறுதி அறிக்கையில் இணைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நாடா ளுமன்ற கூட்டுக்குழு அளித்த அறிக்கையை மக்களவைத் தலைவர் ஏற்கக் கூடாது என்று முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச் சர் ஆ.ராசா கடிதம் எழுதியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஜேபிசி விசாரணைக்கு ஆஜராக என்னை அனு மதிக்கவில்லை. மேலும் நான் அனுப்பிய எழுத் துப்பூர்வ அறிக்கையை யும் ஜேபிசி கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இது நாடாளுமன்றத் திற்கு அநீதியை சேர்த் துள்ளது. எனவே, இந்த அறிக்கையை நிராகரிப் பதுடன், ஜேபிசி தலை வர் பி.சி.சாக்கோவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும். என் தரப்பு வாதங்களை சேர்த்துக் கொண்டால் மட்டுமே அறிக்கையை தாங்கள் ஏற்கவேண்டும் என்று ராசா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: