வியாழன், 7 நவம்பர், 2013

பள்ளி மாணவனை அடித்த போலீஸ் எஸ்.பி,யின் மனைவி !

சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (30). இவரது மனைவி லத்திகா (26), இவர்களது மகன் ஷியம்சுந்தர் (8), சிறுவன் ஷியாம் சுந்தர் சூரமங்கள் பகுதியில் உள்ள “ஸ்கை கிட்ஸ்” என்ற  தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான இந்த பள்ளியை போலீஸ் எஸ்.பி. ஈஸ்வரன் என்பவரின் மனைவி பிரியா என்பவர் நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி மதியம் சிறுவன் ஷியாம்சுந்தர் உடலில் கை கால் ஆகிய பகுதிகளில் வீங்கிய நிலையில், உடலெல்லாம் கீரல் காயங்களுடன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான்.
மாணவன் ஷியாம் சுந்தரை பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் வெளியாட்கள் சேர்ந்துகொண்டு தாக்கியதில் அவனது உடலில் காயங்கள் ஏற்பட்டதாக சூரமங்கலம் காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர்கள் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மாவட்ட கல்வித்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலும் இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து, விசாரணை மேற்கொண்ட குழந்தைகள் நல அலுவலர் தேவகி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மறுநாள் பள்ளிக்கு சென்றுள்ளனர். ஆனால், பள்ளியின் நிர்வாகியான பிரியா அலுவலர்களை பள்ளிக்குள் விட மறுத்ததுடன், நான் நாளை “பிரஸ் மீட்” வைக்கிறேன், உங்களுக்கு தேவையான தகவல்களை அங்கே வந்து தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.உங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தை பலமாக தாக்கப்பட்டு, மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறான், இது குறித்து விசாரணை நடத்த நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும், இல்லையென்றால் நாங்கள் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டிவரும் என்று எச்சரிக்கை செய்த பிறகு பள்ளிக்குள் சென்று விசாரணை நடத்த அனுமதித்தார்.இந்த நிலையில், விசாரானை முடிந்து வெளியே வந்த தேவகி செய்தியாளர்களிடம் கூறும்போது, பள்ளியில் நிர்வாகி பிரியாவுடன், அவரது “கேஸ் ஏஜென்சி”யில் வேலைபார்க்கும் நபர்களான ராஜேஷ் மற்றும் தினேஷ் என்ற இருவரும் சேர்ந்து சிறுவன் ஷியாம் சுந்தரை அடித்துள்ளனர்.
இந்த இருவருக்கும் பள்ளிக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது. பள்ளி ஆசிரியர்கள் பதிவேட்டிலும், ஊழியர்கள் பதிவேட்டிலும் இவர்களின் பெயர் இல்லை. இவர்களின் மீது முதலில் சேலம் காவல்துறையில் புகார் கொடுக்கப்படும், முறையான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மாநில குழந்தைகள் நல ஆணையத்தின் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மாணவனின் தந்தை கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் பேரில், சூரமங்கலம் போலீசார் வெள்ளிக்கிழமை பள்ளியின் நிர்வாகி பிரியா மற்றும் ராஜேஷ், தினேஷ் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி பின்னர் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக சென்ற பிரியாவின் கணவர் ஈஸ்வரன் தற்போது, தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் பணியாற்றி வருகிறார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: