திங்கள், 4 நவம்பர், 2013

சவுதி பெண்களின் வாகனம் ஓட்டுதற்கான போராட்டம் வெற்றி பெறுமா ?


சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டும் உரிமை வேண்டி நடத்தப்படும் போராட்டம் வெற்றி பெறுமா என்பது உலகம் முழுவதும் தற்போது  உற்று நோக்கப்படுகிறது , உலகிலேயே சவுதியில் மட்டும்தான் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை மறுக்கப்படுகிறது,
இதில் வேடிக்கையோ வேதனையோ  என்னவென்றால் இஸ்லாமியர்களின் புனித பூமியாக கருதப்படும் இந்த நாட்டில்  பெண்களுக்கு எதிரான  இந்த  நடை முறை  இருப்பதையும் பொருட்படுத்தாது  பல மேற்கு நாடுகளும் மற்றும் பல இஸ்லாமியர்களும் இன்னும்  இந்தநாட்டை ஆதரிப்பதுதான் விந்தை ,
இந்த நாடு   விமர்சனங்களுக்கு  அப்பாற்பட்ட தேசமாக சில  மதவாதிகளால் கருதப்படுகிறது,  எப்பொழுதும் சமயங்கள் எல்லாமே பெண்களை  தாழ்த்தியே  நடத்துகிறது,  ஆனாலும்  சவுதியில் மட்டும்தான் இந்த மாதிரியான  மதவாத சட்டங்கள் உள்ளன,

கருத்துகள் இல்லை: