சேலத்தின் நடந்த அவலம்: கந்துவட்டிக் காரர்களின் மிரட்டலால் காவுகொள்ளப்பட்ட நான்கு உயிர்கள்
கந்துவட்டிக் கொடுமையினால் ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இந்தியாவின் சேலத்தில் இடம்பெற்றுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்லும் வேகத்தில் கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர்களதும் பணம் வாங்குபவர்களினதும் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றது. இந்தியாவைப் பொறுத்தவரை அதிகமான பணக்காரர்களும் அதிகமான ஏழைகளும் அங்குதான் நிறைந்துள்ளார்கள்.
இந்தக் கந்து வட்டியின் விளைவு இப்போது சிறிது சிறிதாக புலப்பட
ஆரம்பித்துள்ளது. அதன் உச்சக்கட்டமாக அண்மையில் ஓர் இளம்
குடும்பமே காவு கொள்ளப்பட்டுள்ளது.
சேலம் அருகில் உள்ள சிவதாபுரம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த
வெள்ளிப்பட்டறை தொழிலாளி மாரியப்பன் (வயது 34), இவரது மனைவி
தங்கபொன்னு (வயது 30). இவர்களுக்கு வனிதா (வயது7), சரவணன் (வயது 5),
ரோஸ்னி (வயது 3) என்ற குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளில் வனிதா 2
ஆம் வகுப்பு படித்து வந்தார்.
தங்கப்பொன்னு தனது மகள் ரோஸ்னியை சேலம் ரெட்டிப்பட்டியில்
வசிக்கும் தனது சித்தி ராணியிடம் கொடுத்து வளர்த்து வந்தார். ராணிக்கு
குழந்தைகள் இல்லை என்பதால் அவரும் குழந்தையை பாசத்துடன் வளர்த்து
வந்தார்.
மாரியப்பன் சிவதாபுரம் முத்துநாயக்கன்பட்டி காலனியை சேர்ந்த
முருகன் என்பவரிடம் வெள்ளி தொழிலுக்கு வேலைக்கு சென்று வந்தார்.
இவரிடம் மாரியப்பன் தனது வீட்டு செலவிற்கு இரண்டேகால் இலட்சம் ரூபா
கந்து வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.
இதுதவிர வேறு சிலரிடமும் அவர் கடன் வாங்கியுள்ளார். இந்தக் கடன்களை
மாரியப்பனால் திருப்பிச் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. கடன்
கொடுத்தவர்கள் மாரியப்பன் வீட்டிற்கு தின மும் வந்து பணத்தை திருப்பி
கேட்டு வந்த னர்.
இந்த பிரச்சினையால் மாரியப்பன், முருக னின் வெள்ளிப்பட்டறைக்கு
வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். கடன் தொல்லையால்
அவதிப்பட்டு வந்த மாரியப்பன் வெளியில் சென்று விட்டு கடந்த 27 ஆம்
திகதி வீடு திரும்பினார்.
இரவு 7.30 மணியளவில் மாரியப்பனின் வீட்டிற்கு கடன்காரர்கள்
சிலர் வந்து அவரை மிரட்டிச் சென்றனர். இதனால் வாழ்க்கையில்
வெறுப்படைந்த மாரியப்பன் வெள்ளிப்பட்டறை தொழிலுக்கு பயன்படுத்தும்
சயனைட்டை குடித்து குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
பின்னர் அவர் இதுபற்றி அவரது மனைவியிடமும் கூறியுள்ளார். இதற்கு
அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
மனைவி தங்கபொன்னு டீ வைத்து அதை பாத்திரத்தில் எடுத்து வந்தார். இதில்
மாரியப்பன் தான் வீட்டில் வைத்து இருந்த சயனைட்டை கொட்டி கரண்டியால்
கலக்கினார். பிறகு இந்த டீயை மாரியப்பன் தனது 2 குழந்தைகளான வனிதா,
சரவணன் ஆகியோருக்கு கொடுத்தார். இதை குடித்த அவர்கள் துடிதுடித்து
இறந்துள்ளனர். கண்முன்னே தமது பிள்ளைகள் துடிதுடித்து இறந்ததை
பார்த்து கணவனும், மனைவியும் கதறி அழுதனர்.
பின்னர் அவர்களும் சயனட் விஷம் கலந்த டீயை குடித்தனர். இந்த நிலையில்
தங்கப்பொன்னு செல் போன் மூலம் ஓமலூர் ரெட்டிப்பட்டியில் வசிக்கும்
தனது தந்தை ரங்கசாமிக்கு பேசி, நாங்கள் கடன் தொல்லையால்
அவதிப்படுகிறோம். கடனை திருப்பி அடைக்க முடிய வில்லை. இதனால்
சயனைட்டு குடித்து தற்கொலை செய்து கொள்கிறோம் என கூறி போனை வைத்து
விட்டார். இதன் பின்னர் மாரியப்பனும், தங்கப்பொன்னுவும் சயனைட்டு
குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தங்கபொன்னு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக கூறியதை கேட்டு
அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை உடனே அவரது மகன் மற்றும் உறவினர்களை
சிவதாபுரத்திற்கு அனுப்பி வைத்தார். இவர்கள் மாரியப்பன் வீட்டிற்கு
வந்து பார்த்தனர். அங்கு மாரியப்பன், அவரது மனைவி தங்கப்பொன்னு,
குழந்தைகள் வனிதா, சரவணன் ஆகியோர் வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்தனர்.
இந்த உடல்களை பார்த்து அனைவரும் கதறி அழுதனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து கொண்ட லாம்பட்டி பொலிஸில் முறைப்பாடு
செய்யப்பட்டது. இதையடுத்து சேலம் பொலி ஸார் சம்பவ இடம் விரைந்து
வந்து சடலங்களை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு
வருகின்றனர். மாரியப்பன் குடும்பத்துடன் தற்கொலை செய் யப்
பயன்படுத்திய சயனைட் போத்தல்கள் மற்றும் தேநீர் டம்ளர்கள்,
பாத்திரங்களை மீட்டெடுத்த பொலிஸார் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
மாரியப்பன், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த
பெருந்திரளான பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மாரியப்பனின் வீட்டை
முற்றுகையிட்டனர்.அத்து டன், அவர்கள் நான்கு பேரின் சாவுக்கு
காரணமான கந்து வட்டிக்காரர்களை கைது செய்ய வேண்டும் என பொலிஸாரிடம்
வலியுறுத்தியுள்ளனர். இறந்த பொன்னுவின் சகோதரர் முருகன்
கொண்டலாம்பட்டி பொலிஸாரிடம் யார் யாரிடம் மாரியப்பன் கடன் வாங்கி
இருந்தார் என முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சேலம் சிவதாபுரத்தை
சேர்ந்த முருகேசன் (வயது 33), ஏழுமலை (வயது 30) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு
செய்யப்பட்டுள்ளது.
முருகேசனிடம் மாரியப்பன் .33 ஆயிரம் ரூபாவும், ஏழுமலையிடம்3500
ரூபாவும் கடன் வாங்கி உள்ளார். இதைவிட சிவதாபுரத்தை சேர்ந்த
வெள்ளிப்பட்டறை உரிமையாளர் முருகன் மற்றும் ஒரு கடன் நிதி
வழங்குநரையும் பொலிஸார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
முருகனிடம் இருந்து இரண்டேகால் இலட் சமும், ஒரு கடன் நிதி உதவி
வழங்குனரிடமிருந்து 22 ஆயிரம் ரூபாவும் மாரியப்பன் கடன்
வாங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. இவர்கள் தவிர மேலும் சிலரிடமும்
மாரியப்பன் கடன் வாங்கி உள்ளார். இவர்களில் யார் யார் வந்து மாரியப்பனை
மிரட்டினர் என்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தலைமறைவாக உள்ள முருகன் மற்றும் பைனான்ஸ் உரிமையாளர் ஒருவரை
பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளிப்பட்டறை தொழிலாளி மாரியப் பன் குடும்பத்துடன் தற்கொலை
செய்து கொண்ட சம்பவம் சிவதாபுரத்தில் பெரும் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத் தால் அந்தப் பிரதேச மெங் கும் அமைதியாக
காணப்படுகிறது. இந்தப் பகுதியில் ஏராளமான வெள்ளிப்பட்டறை கள்
காணப்படுகின்றன. இந்த வெள்ளிப் பட்டறைகளை மூடி அந்தப் பகுதி மக்கள் தமது
சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பணக் கஷ்டத்தின் காரணமாக கந்துவட் டிக்கு கடன் வாங்கியதால் நான்கு உயிர்கள்
பறிக்கப்பட்டுள்ளன. இந்தக் கொடுமைகள் தொடர்ந்தம் இடம்பெறாதிருப்பதற்கு
கந்து வட்டிக்கு வாங்குபவர்கள் மட்டுமன்றி கந்து வட்டிக்கு பணம்
கொடுப்பவர்களும் மனித நேயத்துடன் செயற்படவேண்டும். அவ்வாறு செயற்பட்டால்
மாத்திரமே இவ்வாறான உயிரிழப்புக்களை தடுக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக