வியாழன், 7 நவம்பர், 2013

மாலி நாட்டில் பிரான்சு நிருபர்கள் 2 பேர் கடத்தி கொலை: அல்கொய்தா தீவிரவாதிகள் அட்டூழியம்


Family mourns: A coffin bearing the body of one of the two French radio journalists killed in Mali.

Family mourns: A coffin bearing the body of one of the two French radio journalists killed in Mali is carried upon arrival at Roissy Charles de Gaulle Airport. Photo: AP
ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டில் அரசுக்கு எதிராக அல்கொய்தா
இயக்கத்தின் ஆதரவுடன் தீவிரவாதிகள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாலி அரசுக்கு உதவுவதற்காக பிரான்சு நாட்டு படைகளும் அங்குள்ளன.
இந்த நிலையில் பிரான்சு நாட்டு செய்தி நிறுவனம் ஒன்றின் பெண் நிருபர் கிறிஸ்டினா (வயது 57), கிலவுட் வேரியான் (56) ஆகியோர் மாலி நாட்டில் செய்தி சேகரிக்க சென்றனர். அவர்கள் ஜிதால் என்ற இடத்தில் உள்ளூர் தலைவர் ஒருவரை பேட்டி எடுப்பதற்காக சென்றனர்.
அப்போது இரு நிருபர்களையும் அல்கொய்தா தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். அவர்கள் இருவரையும் சுட்டு கொன்றுவிட்டதாக அல்கொய்தா இயக்கம அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: