சேலத்தில், ஆடிட்டர் ரமேஷை, பின் தொடர்ந்து சென்று, கொலை செய்தது
எப்படி' என, போலீஸ் அதிகாரிகளிடம், பயங்கரவாதி பிலால் மாலிக் விவரித்தான்.தமிழகத்தில்,
இந்து அமபை்பு தலைவர்கள் கொலையில் தொடர்புடையதாக கைதான, 'போலீஸ்'
பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரிடம், சேலம், சூரமங்கலம், அனைத்து மகளிர்
போலீஸ் நிலையத்தில், சிறப்பு புலனாய்வு பிரிவான, எஸ்.ஐ.டி., போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையின் எட்டாவது நாளான நேற்று, எஸ்.ஐ.டி.,
போலீசார், அதிகாலை, 4:45 மணிக்கு, பிலால் மாலிக்கை, சேலம் புதிய பஸ்
நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
நோட்டை கபை்பற்றினர்:அங்குள்ள, சைக்கிள் ஸ்டாண்டில், பிலால் மாலிக், மொபட்டை நிறுத்தியது குறித்து விசாரணை நடத்தினர்.அதில், ஜூலை, 15ம் தேதி முதல், ஜூலை, 18 வரை, பிலால்மாலிக், மொபட்டை நிறுத்தி வைத்ததை உறுதி செய்ய, அங்கிருந்த, வாகனங்களின் பதிவு எண் எழுதும் நோட்டை கபை்பற்றினர். அத்துடன், அங்கு பணியில் இருந்த ஊழியர்களை, விசாரணைக்கும் ஆஜராகும்படி தெரிவித்தனர்.
காரை பின் தொடர்ந்து...:பின், திவ்யா டவர்ஸ் ஓட்டலுக்கு, பிலால் மாலிக்கை, போலீசார் அழைத்துச் சென்றனர்.அங்கு, ஆடிட்டர் ரமேஷை கொலை செய்ய ஒத்திகை பார்த்ததையும், அங்கிருந்து மரவனேரியில் உள்ள, ரமேஷின் வீட்டுக்கு, காரை பின் தொடர்ந்து சென்றதையும், பிலால் மாலிக், போலீஸ் வாகனத்தில் இருந்தபடியே விளக்கினான்.பகல், 11:00 மணிக்கு, எஸ்.ஐ.டி., பிரிவு டி.ஜி.பி., நரேந்திரபால் சிங், சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் வந்து, போலீஸ் பக்ருதின், பிலால் மாலிக்கிடம் விசாரணை நடத்தினார்.விசாரணையில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், தொடர்ந்து, பயங்கரவாதிகளிடம் நடத்த வேண்டிய விசாரணை குறித்து, அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
பயங்கரவாதிகள், போலீஸ் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக்கிடம் விசாரணை நடத்தி வரும், எஸ்.ஐ.டி., போலீசார், இருவரையும், சம்பவ இடம் உட்பட, பல பகுதிகளுக்கு, அதிகாலையில் விசாரணைக்கு அழைத்துச் செல்வதை, வழக்கமாக கொண்டுள்ளனர்.இரு பயங்கரவாதிகளையும், கடந்த மாதம், 31ம் தேதி, சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது, போலீசாருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இது போன்ற சம்பவங்களை தவிர்க்கவும், பத்திரிகையில் வரும் செய்திகள், குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது என்பதற்காகவும், அதிகாலை மற்றும் இருட்டில், விசாரணை நடப்பதாக, எஸ்.ஐ.டி., போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
-நமது நிருபர்- dinamalar.com

இருட்டில் விசாரணை ஏன்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக